Latest News
Saturday, June 1, 2013

தேசிய விருது இயக்குனர் ரிதுபர்னோ கோஸ் காலமானார்!

பிரபல பெங்காலி திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஸ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49. மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்தவர் ரிதுபர்னோ கோஸ். இவரது பெற்றோர் சினிமா துறையில் இருந்ததால் ரிதுபர்னோவுக்கும் சினமா மீது மோகம் வந்தது. ஆரம்பகாலத்தில் விளம்பர படங்க‌ள் மூலம் தனது கலைபயணத்தை தொடர்ந்த ரிதுபர்னோ பின்னர் 1994ம் ஆண்டு ஹைரர் அங்தி என்ற பெங்காலி படம் மூலம் இயக்குனராக அவதரித்தார். தொடர்ந்து பெங்காலி மொழியில் உன்சி ஏப்ரல், தகான், உட்சாப், ரெயின்கோட், தோசர், தி லாஸ்ட் லீயர், அபோகோமென் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கடைசியாக 2012ம் ஆண்டு சித்ரங்கா என்ற படத்தை இயக்கினார்.

இதுவரை 19 படங்களை இயக்கியுள்ள ரித்துபர்னோவுக்கு இரண்டு முறை சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாது இவரது அநேக படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இவர் படம் இயக்கினால் கண்டிப்பாக ஏதாவது ஒரு பிரிவுகளில் தேசிய விருது கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனாலேயே இவரை தேசிய விருது இயக்குனர் என்று தான் அழைப்பர். அந்தளவுக்கு மிகத்திறமையான இயக்குனரான ரிதுபர்னோ இன்று(மே 30ம் தேதி) காலை மாரடைப்பால் தனது வீட்டில் காலமானார். மறைந்த ரிதுபர்னோவின் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரிதுபர்னோவின் திடீர் மரணம் பெங்காலி திரைத்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தேசிய விருது இயக்குனர் ரிதுபர்னோ கோஸ் காலமானார்! Rating: 5 Reviewed By: gg