ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்குத் தான் தலைவா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பெயரைப் பார்த்தால் அரசியல் கதையோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் பெயர் மட்டும் தான் அப்படி, மற்றபடி படத்துக்கும் அரசியலுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்று விஜய், ஏ எல் விஜய் இருவருமே கூறி இருக்கின்றனர்.
ஏ எல் விஜய்யின் ஆஸ்தான ஹீரோயின் அமலாபால் தான் இந்தப் படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சந்தானம், சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்.
விஜய் சிறந்த பாடகர் என்பது அனைவருக்கும் தெரியும். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் துப்பாக்கி படத்திற்காக கூகிள் கூகிள் பாடலைப் பாடியவர், தலைவா படத்திலும் ஒரு பாடலைப் பாடி இருக்கிறார். இந்தப் பாடலில் சந்தானமும் இணைந்து பாடி இருப்பதாகத் தெரிகிறது. மேலும் 250 கலைஞர்கள் பங்கேற்க பிரம்மாண்டமான ஒரு பாடலையும் சமீபத்தில் படமாக்கி இருக்கிறார்கள்.
மும்பை, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பை முடித்த கையோடு இறுதி கட்டப் படப்பிடிப்பை ஆஸ்திரேலியாவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தலைவா படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் ரிலீசாகி பலத்த வரவேற்பைப் பெற்றன. அத்துடன் இந்தப் படத்தின் டீசரையும் சில நாட்களுக்கு முனனர் தான் ரிலீஸ் செய்தனர்.


0 comments:
Post a Comment