8 பாயிண்ட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் அருமைசந்திரன் தயாரிக்கும் படம் ஓம் சாந்தி ஓம். இதில் நாயகனாக ஸ்ரீகாந்த் நாயகியாக நீலம் நடிக்கின்றனர். வினோதினி, ஜூனியர் பாலையா, மலையாள காமெடியன் பைஜு ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை டி.சூர்ய பிரபாகர் இயக்குகிறார்.
நல்லவராக கெட்டவராக இருந்தாலும் எப்போதேனும் யாருக்காவது உதவி இருப்பர். அல்லது உதவியை பெற்று இருப்பர்.
நாயகன், நாயகி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். பிறருக்கு நாயகன் உதவுவது நாயகிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் காதலில் பிரச்சினை ஏற்படுகிறது. அதை எப்படி புத்திசாலித் தனமாக நாயகன் சமாளித்தான் என்பதே கதை.
திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. காவிரியாற்று பாலத்தில் முக்கிய காட்சி எடுக்கப்பட்டு உள்ளது. அறுபது சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. கதை, திரைக்கதை வடிவிலும் வணிக ரீதியிலான அம்சங்கள் கொண்ட வகையிலும் தொழில் நுட்ப ரீதியிலும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும் என்றார் இயக்குனர்.
ஒளிப்பதிவு: கே.எம்.பாஸ்கரன், இசை: விஜய் எபிநேசர், நடனம்: அஜய்ராஜ், ஸ்டண்ட்: கணேஷ், எடிட்டிங்: விவேக் ஹர்ஷன். தயாரிப்பு மேற்பார்வை: நல்லதம்பி, இணை தயாரிப்பு: ராஜா அகஸ்திய பாரதி.


0 comments:
Post a Comment