Latest News
Saturday, August 24, 2013

மீண்டும் இணையும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' கூட்டணி

சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்குநர் ராஜேஷின் அசோஸியேட் பொன்ராம் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்துக்காக இசையமைப்பாளர் டி இமான் இசையில் முதன்முறையாக ஒரு பாடலைப் பாடி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்று தொடங்கும் இந்தப் பாடல் யு டியூப்பில் வெளியிடப்பட்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி இருக்கிறது. செப்டம்பர் 6 ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷலாக ரிலீசாக இருக்கும் இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் அளித்துள்ளது. இது தவிர 'மான் கராத்தே', 'சொப்பன சுந்தரி' உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் மீண்டும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' இயக்குனர் பொன்ராமுடன் மீண்டும் இணைய இருக்கிறார் சிவகார்த்திகேயன். லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மீண்டும் இணையும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' கூட்டணி Rating: 5 Reviewed By: gg