Latest News
Saturday, August 10, 2013

பொறுமை... கண்ணியம்... அமைதி - ரசிகர்களுக்கு விஜய் அறிக்கை

சென்னை: தலைவா திரைப்படம் விரைவில் வெளியாகும்.. அதுவரை விரும்பத்தகாத காரியங்களில் ஈடுபடாமல் பொறுமையோடும் கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என்று ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் நடித்த தலைவா திரைப்படம் இந்த வாரம் 9.8.2013 அன்று திரைக்கு வருவதற்காக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை. என் மீது பாசமும் அன்பும் கொண்ட ரசிகர்கள், ரசிகைகள், தாய்மார்கள் உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்வது என்னவென்றால், ஏமாற்றினால் சில ரசிகர்கள் விரும்பத்தகாத சில காரியங்களில் ஈடுபடுவதாக நான் அறிகிறேன். இது நமக்கு நல்லதல்ல. மிக விரைவில் தலைவா திரைப்படம் வெளியாகும். அதுவரை பொறுமையோடும் கண்ணியத்தோடும் அமைதியாக இருக்க வேண்டுமென்று என் நெஞ்சில் குடியிருக்கும் அத்தனை பேரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: பொறுமை... கண்ணியம்... அமைதி - ரசிகர்களுக்கு விஜய் அறிக்கை Rating: 5 Reviewed By: gg