Latest News
Friday, August 9, 2013

என் இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்மா: ஹன்சிகாவுக்கு சிம்பு!

சென்னை: நடிகை ஹன்சிகா இன்று '22' வது பிறந்தநாளை தாம் தத்தெடுத்திருக்கும் குழந்தைகளுடன் கொண்டாடினார். அவருடைய காதலரான நடிகர் சிம்பு, தன்னுடை இளவரசிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்மா என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
திரை உலகில் இப்போது பேசப்படுகிற காதல் ஜோடி சிம்பு- ஹன்சிகா. இதை இருவருமே பகிரங்கப்படுத்தியும் உள்ளனர். நடிகர் சிம்புகூட ஹன்சிகாவுக்கு என்ன பரிசு கொடுப்பது என மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்று நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இன்று ட்விட்டரில் தன்னுடைய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் சிம்பு.
ஹன்சிகாவும் தமது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்டுகளை போட்டுக் கொண்டே இருக்கிறார். அதில் தாம் தத்தெடுத்துள்ள குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடியதாகவும் பதிவிட்டு படங்களையும் போட்டுள்ளார்.

ஹன்சிகா மேடம்- உதயநிதி 

"ஹன்சிகா மேடம்" பிறந்த நாள் வாழ்த்துகள் என்று உதயநிதி ஸ்டாலினும் தம் பங்குக்கு வாழ்த்து போட்டுவிட்டிருக்கிறார். ஏராளமான திரை பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குழந்தைகளுடன்...

தத்தெடுத்துள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டும் ஹன்சிகா

மகிழ்ச்சி பொங்க..

குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கும் ஹன்சிகா

உச்ச மகிழ்ச்சி 

மகிழ்ச்சியில் உச்சத்தில் குழந்தைகளுடன்...
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: என் இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்மா: ஹன்சிகாவுக்கு சிம்பு! Rating: 5 Reviewed By: gg