Latest News
Saturday, August 10, 2013

ஐ படப்பிடிப்பு க்ளைமாக்ஸை நெருங்கி விட்டது

அந்நியனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும், சீயான் விக்ரமும் இணைந்துள்ள படம் ஐ. இப்படத்தில் மதராசப்பட்டினம் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பல கெட்டப்புகளில்நடிககிறார் விக்ரம். அதற்காக மாதக்கணக்கில் உடற்பயிற்சிகளை செய்து தனது உடல் எடையை அதிகப்படுத்தி, குறைத்து என மாறி மாறி நடித்து வருகிறார் விக்ரம். சீனா, பாங்காக், பொள்ளாச்சி, கொடைக்கானல் மற்றும் சென்னை லொகேஷன்களில் படமாகி வந்த ஐ படப்பிடிப்பு இப்போது க்ளைமாக்ஸை நெருங்கி விட்டது.

தற்போது சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பு மொத்தம் 30 நாட்கள் நடைபெறுகிறதாம். அதோடு, கிட்டத்தட்ட அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிந்து விடும் என்கிறார்கள்.

இந்த நிலையில், இதுவரை ஐ படம் எந்த மாதிரியான கதைக்களம் என்பதே வெளியில் கசியாமல் இருந்தது. ஆனால், இப்போது ஒலிம்பிக்கை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகி வருவதாக யூனிட் நபர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஐ படப்பிடிப்பு க்ளைமாக்ஸை நெருங்கி விட்டது Rating: 5 Reviewed By: gg