Latest News
Thursday, August 15, 2013

கிணத்துக்குள்ளே ஸாங்... எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா...?

கூகுள், பேஸ்புக், யூ ட்யூப்களில் தேடி தேடி சீன் பிடிக்கிற வழக்கம் வந்து விட்டது சினிமாவுக்காக டிஸ்கஷன் செய்யும் அநேக இயக்குனர்களுக்கு. புதுசு புதுசா அல்வா கிண்டவில்லை என்றால் ஊசிப்போன ஓல்டு உப்புமா சட்டிக்குள் நம்மை இறக்கிவிட்டு விடுவார்கள் என்கிற அச்சம் வெற்றி பெற்ற அத்தனை இயக்குனர்கள் மனசிலும் இருக்கிறது.



ஆணானப்பட்ட அஜீத்தே அழைத்து, 'நல்ல கதை இருந்தா சொல்லுங்க' என்று கேட்கிற அளவுக்கு முதல் படத்தில் ஊர் உலகத்தை கவர்ந்த பீட்சா இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் 'ஜிகிர்தண்டா' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க மதுரையில் நடக்கும் கதை என்பதால் மொத்த டீமும் புலம் பெயர்ந்து மதுரையில் கிடக்கிறது.



இந்த படத்திற்காகதான் புதுசு புதுசாக சிந்தித்துக் கொண்டிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் எடுத்திருக்கிறார்களாம். தமிழ்சினிமாவில் இப்படியொரு பாடல் காட்சி இதற்கு முன்பு வந்ததில்லை என்கிற அளவுக்கு பில்டப் கொடுக்கிறது மதுரை வட்டார தகவல்கள்.



ரெண்டு வாரத்திற்கு முன்பு ஜிகிர்தண்டா கதையை எழுதி, 'சார்... ஏன் சார் இஷ்டத்துக்கு எழுதுறீங்க' என்று அவரை கோபப்பட வைத்துவிட்டோம். இந்த கிணற்று சீனுக்கு தலைவர் ரீயாக்ஷன் என்னவோ?

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கிணத்துக்குள்ளே ஸாங்... எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா...? Rating: 5 Reviewed By: gg