Latest News
Friday, August 23, 2013

திருப்பதி பிரதர்ஸில் சிவகார்த்திகேயன்!

இயக்குனர் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தற்போது ‘யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘இவன் வேற மாதிரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பிலும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கும் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பிலும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’ என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து ரிலீசாகவுள்ள படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அடுத்த மாதம் 6-ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்திருக்கிறார். லிங்குசாமி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்க இருக்கிறார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருப்பதி பிரதர்ஸில் சிவகார்த்திகேயன்! Rating: 5 Reviewed By: gg