Latest News
Friday, August 23, 2013

சித்தார்த்தின் 'ஜிகர்தண்டா' ஸ்டோரி

பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். முதல்
படமே பேசும்படி அமைந்து விட்டதால், அனைவருக்கும் தெரிந்த இயக்குனராகி விட்டார். தற்போது 'ஜிகர்தண்டா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
முதல் படத்தைப் போன்று இரண்டாவது படத்துக்கும் சாப்பிடும் பொருளான 'ஜிகர்தண்டா'வை தலைப்பாக்கி இருக்கிறார். சித்தார்த், லட்சுமிமேனன் இருவரும் ஹீரோ ஹீரோயினாக நடிக்க மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் படத்திற்கான பூஜை ஸ்டில்லைத் தவிர வேறு எந்த விஷயமும் லீக்காகி விடாமல் கவனமாக இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஜிகர்தண்டா' கதை கொஞ்சம் லீக்காகி இருக்கிறது.
சினிமாவில் சான்ஸ் தேடிக் கொண்டிருக்கும் சித்தார்த், ஒரு புரட்யூசர்கிட்ட கதை சொல்கிறார். மதுரையில் இருக்கும் தாதா என்னென்ன கோல்மால் செய்வான், போலீசை எப்படி டீல் பண்ணுவான், பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்குவான் என்று முழுக்கதையையும் சொல்லி முடிக்கிறார். கதை பிடிச்சிருக்கு, எதுக்கும் மதுரை பக்கம் ஒரு தடவை போயி லொக்கேஷன் பாத்துட்டு வந்துருங்க என்று சொல்கிறார் தயாரிப்பாளர். சித்தார்த்தும் மதுரைக்கு வருகிறார்.
சித்தார்த் தனது கதையில் எப்படி எல்லாம் தாதாக்களைப் பற்றி சொல்லி இருந்தாரோ அதற்கெல்லாம் உல்டாவாக நிஜ தாதாக்கள் இருக்கின்றனர். அதன் பினனர் என்ன நடக்கும் என்பதை காமெடியாக சொல்வது தான் 'ஜிகர்தண்டா' கதையாம்.


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சித்தார்த்தின் 'ஜிகர்தண்டா' ஸ்டோரி Rating: 5 Reviewed By: gg