Latest News
Wednesday, August 14, 2013

ஜிம்மிலேயே தவம் கிடக்கும் காஜல்

காஜல் அகர்வால், வட மாநிலத்தை சேர்ந்தவர். அங்குள்ள கோதுமை உணவு வகைகளை சாப்பிட்ட வரை, அவரது உடல்கட்டு, ஸ்லிம்மாக இருந்தது. ஆனால்  தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வந்து, இங்குள்ள, அரிசி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டதால், உடல் எடை அதிகரித்துக் கொண்டே வந்தது.

அதனால், ஜிம் பக்கம், காத்து வாங்க கூட செல்லாமல் இருந்து வந்த காஜல், இப்போதெல்லாம், அடிக்கடி, ஜிம்முக்கு சென்று, உடற்பயிற்சி செய்கிறார்.

அதோடு, தீவிர உணவு கட்டுப்பாட்டையும், கடைபிடிக்கிறார். மற்ற நடிகைகளை போல், வீட்டிற்குள்ளேயே, ஜிம் உருவாக்கவில்லை காஜல்.

சென்னை மற்றும் ஐதராபாத்தில், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள, ஜிம்களுக்கு விஜயம் செய்கிறார். அப்படி அடிக்கடி செல்வதால், இப்போது, சினிமா வட்டாரத்தை விட, வெளி வட்டார தோழர் - தோழியர், காஜல் அகர்வாலுக்கு பெருகி விட்டனர்.


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஜிம்மிலேயே தவம் கிடக்கும் காஜல் Rating: 5 Reviewed By: gg