Latest News
Wednesday, August 14, 2013

தலைவா இனி என்றுமே வராதாம்! விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் தலைவா. எந்த அளவுக்கு படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அந்த அளவுக்கு ஏமாற்றமும் மிஞ்சியது என்று கூறலாம். ஆமாங்க படம் குறிப்பிட்ட நாளில் அதாவது 9ம் தேதி ரிலீஸாகவில்லை. தலைவா படத்தை ரிலீஸ் செய்தால் திரையரங்குகளில் வெடிகுண்டு வெடிக்கும் என வந்த மர்ம தொலைபேசி மிரட்டலே படத்துக்கு பெரிய சிக்கலாக அமைந்தது. இதனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. ஆனால் இது மட்டும் ஒரு காரணம் கிடையாது. இதற்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் சதியே இருக்கிறதாம். இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி தரும் விஷயம் நடக்க இருக்கிறது. தலைவா படம் இனி என்றுமே ரிலீஸாகாதாம். உண்மைதாங்க, மேலிடம் கைவிரித்து விட்டதாம். அதோடு உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் எனவும் கூறிவிட்டதாம். இது விஜய்யை கடும் சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறது. இதனிடையே படத்தை ரிலீஸ் செய்ய வலியுறுத்தி விஜய்யின் மக்கள் இயக்கம் சென்னையில் நாளை உண்ணாவிரத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் விஜய்யுடைய அடுத்த படம் குறித்து பயமும் இப்போதே தொற்றிக் கொண்டதாம்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தலைவா இனி என்றுமே வராதாம்! விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் Rating: 5 Reviewed By: gg