Latest News
Thursday, August 15, 2013

தலைவா சிக்கலுக்கு இதுதான் காரணமா...?

பேஸ்புக்கில் விஜய்யின் தலைவா படம் குறித்து ஏகப்பட்ட விவாதங்கள். ஷேர்கள், டேக்குகள்... கண்களில் டொக்கு விழுந்து போகும் அளவுக்கு போட்டுத் தாக்குகிறார்கள்.

தலைவா படத்திற்கு தடங்கல் வந்ததற்கு இதுதான் காரணமா என்று கேட்டு ஏகப்பட்ட போட்டோக்களைப் போட்டு பொளந்து கட்டுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தைப் போட்டு குசும்பு பண்ணியுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியும், விஜய்யின் தலைவா பட ஸ்டில்லையும் அதில் பக்கத்தில் பக்கத்தில் போட்டுள்ளனர்.

பின்னர் அந்தப் படத்திற்குக் கீழே.. ஒருவேளை தலைவா படம் தமிழகத்தில் வெளியாகாததற்கு இதுதான் காரணமோ என்று கேட்டுள்ளனர். அதாவது, தலைவா படத்தின் ஸ்டில்லில் விஜய் கைகளை குவித்தபடி இருக்கிறார்.. நேர் கொண்ட பார்வையுடன்... அதேபோலத்தான் கருணாநிதியும் நேராக பார்த்தபடி கைகளைக் குவித்து அமர்ந்திருக்கிறார்.

இருவருமே கைகளை குவித்திருப்பது ஒரே மாதிரி இருப்பதால்தான் இந்தப் படத்தைப் போட்டு கம்பேரிசன் வம்பை இழுத்து வந்து தெருவில் விட்டுள்ளனர்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தலைவா சிக்கலுக்கு இதுதான் காரணமா...? Rating: 5 Reviewed By: gg