Latest News
Thursday, September 5, 2013

சுட்ட கதை 20ம் தேதி ரிலீஸ்

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் படம் ´சுட்ட கதை´. இதில் நாயகர்களாக பாலாஜி, வெங்கி அறிமுகமாகியுள்ளனர். லஷ்மி பிரியா நாயகியாக நடிக்கிறார். நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ். சிவாஜி, ஜெயபிராகஷ், சாம்ஸ், ரின்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுபு இயக்கியிருக்கிறார்.


இப்படத்தை வரும் 6-ந் தேதி ரிலீசாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது செப்டம்பர் 20-ந் தேதிக்கு தள்ளிப்போட்டுள்ளனர்.


1985-ல் இருந்து 95-ம் வருடம் வரை காமிக் நாவல்கள் பிரபலம். அந்த நாவல்களில் இடம் பெற்ற சம்பங்கள்தான் இப்படத்தின் கதை. இது சுடாமல் சுட்ட கதை. இரண்டு மணி நேரம் இடைவிடாது சிரிப்பு மழையாக இருக்கும். புது மாதிரியான பாணிக்கு காமெடியை கொண்டு சொல்லும் கொடைக்கானலில் நடப்பது போன்று திகில் காமெடி படம் என்று இயக்குனர் இப்டத்தைப் பற்றி கூறியிருந்தார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சுட்ட கதை 20ம் தேதி ரிலீஸ் Rating: 5 Reviewed By: gg