திட்டமிட்டபடி மதகஜராஜா படம் நாளைக்கு வெளிவராது. இந்த தகவல் கோடம்பாக்கத்தில் சிலரது வயிற்றில் புளியையும், சிலரது வயிற்றில் வெல்லத்தையும் கரைத்தது. படத்திற்கு சம்பந்தப்படாத சிலருக்கே இப்படி என்றால் இந்த படத்தை முழுசாக நம்பி முப்பது கோடி ரூபாய்க்கு ரிஸ்க் எடுத்த விஷாலுக்கு எப்படியிருக்கும்? பிளட் பிரஷர் தாறுமாறாக ஆட ஆரம்பித்ததாம். லேசான மயக்கம் அவரை சாய்க்க, அலறி அடித்துக் கொண்டு ஆஸ்பிடலில் சேர்ந்தார்கள் அவரை.
சென்னை எம்.ஆர்.சி நகரிலிருக்கும் அந்த பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். செய்தியை மிக மிக ரகசியமாக வைத்திருந்த போதும், எப்படியோ கசிந்து கோடம்பாக்கத்தின் மவுத்தில் ஸ்பீக்கரை கட்டிவிட ஆளாளுக்கு ஒரு செய்தியை கிளப்பிவிட்டார்கள். விஷால் அதிர்ச்சியாகிட்டாராம் என்றவர்கள் கூடவே இன்னும் பல இம்சைகளை அவிழ்த்துவிட, உங்க உருட்டலுக்கு நான்தானா கிடைச்சேன் என்று அதிர்ந்தே போனார் விஷால். பரபரவென விஷால் தரப்பிலிருந்து விளக்கமும் வந்து சேர்ந்தது நிருபர்களுக்கு.
கடந்த பத்து நாட்களாகவே மதகஜராஜா தொடர்பான பிரமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்ததால் ஏற்பட்ட சோர்வுதான் இது என்றது அவரது தரப்பு. நின்று போன ஒரு படத்தை தனது சொந்த முயற்சியில் வெளியிடுகிற ஒரு ஹீரோவை இன்டஸ்ட்ரி வியப்பாக பார்த்த அதே நேரத்தில்தான், இன்னொரு கும்பல் இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடக்கூடாது என்று கிளம்பியது.
ஜெமினி நிறுவனம் தயாரித்த போடா போடி, நண்பன், இன்னும் சில படங்கள் என சுமார் பதினாலு கோடி ரூபாய் எங்களுக்கு நஷ்டம். இதை எண்ணி எடுத்து வைத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளவும் என்று விஷாலை நெருக்க, வேலியில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக் கொண்டோமோ என்று அதிர்ந்தே போனார் அவர். ஜெமினி தயாரித்த படம்தான் இந்த மதகஜராஜாவும். அதனால் வந்த குழப்பம்தான் இது.
சரி... இப்போதைய நிலைமை என்ன? ஆபரேஷன் தியேட்டரில் போட்டு ஆக்சிஜன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம் மதகஜராஜாவுக்கு. வந்தாலும் வரலாம். இல்லேன்னாலும் இல்லே நிலைமைதான் இந்த நிமிடம் வரைக்கும்.


0 comments:
Post a Comment