| வெளியான முதல் நாளிலேயே 25.5 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ள கிரிஷ்-3. |
ஹிரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் மற்றும் விவேக் ஓபராயின் நடிப்பில் தீபாவளி விருந்தாக வந்த படம் கிரிஷ்-3. வெளியான நாள் முதலே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.வெளியிடப்பட்ட அனைத்து இடங்களிலும் 85 முதல் 100 சதவிகிதமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரைப்பட விமர்சகரான தரன் ஆதர்ஷ் இந்தப் படத்தை “ஒரு சூறாவளி” என்று குறிப்பிட்டுள்ளார். படம்குறித்து தனது இணையதளப் பக்கத்தில், தீபாவளிக்கு முதல் நாள் படம் வெளியானது, அன்று விடுமுறை தினமாக இல்லாத போதிலும் 25.5 கோடி வசூலாகியுள்ளது என்று தெரிவித்துள்ள ஹிரித்திக் ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
Monday, November 4, 2013
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

வெளியான நாள் முதலே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment