Latest News
Monday, November 4, 2013

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஓவியா?

இயக்குனர்கள் எல்லாருமே தப்பானவர்கள் இல்லையே, சொன்னபடி கதை எடுக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார் ஓவியா.

களவாணி படம் மூலம் பிரபலமான ஓவியா, ஜில்லென்று ஒரு சந்திப்பு படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

அப்படத்தில் நடித்த இன்னொரு ஹீரோயினை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கினார்.

இதனையடுத்து இனிமேல் இரண்டு ஹீரோயின் கதைகளில் நடிக்க மாட்டேன் என காரசாரமாக பேட்டிகள் கொடுத்தார்.

இதன் பின்னர் மூடர்கூடம் என்ற படத்தில் நடித்தவர், தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கும் மதயானைக்கூட்டம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே கிருஷ்ணா நடிக்கும் இருக்கு ஆனா இல்ல என்ற படத்திலும் இரண்டு கதாநாயகி கதையில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் ஓவியா.

இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டு ஹீரோயின் கதை என்றாலே எனக்கு அலர்ஜிதான்.

ஆனால் எல்லாருமே தப்பானவர்கள் இல்லையே, கதை சொன்னபடி அப்படியே படமாக்கும் இயக்குனர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் இந்த படத்தில் நடிக்கிறேன்.

அதேசமயம் முன்பு மாதிரி பிரச்னை வரக்கூடாது என்பதற்காக கதை கேட்கும் போது, பின்னர் எக்காரணம் கொண்டும் என் கதாபாத்திரத்தில் கத்தரி வைக்கக்கூடாது என உறுதியாய் கேட்டுக் கொள்கிறேன்.

கலகலப்பு படத்தில் எனக்கும், அஞ்சலிக்கும் கொடுத்தது போல் இப்படத்திலும் இரண்டு நாயகிகளுக்கும் சரிசமமான கதாபாத்திரம் தான் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஓவியா? Rating: 5 Reviewed By: gg