Latest News
Sunday, November 3, 2013

முன்னணி ஹீரோயின்களுடன் தான் டூயட் பாடுவேன்:விமல்

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான விமலுக்கு விபரீதமான ஆசை தொற்றிக் கொண்டுள்ளது.

பசங்க, களவாணி, வாகை சூடவா தொடங்கி தேசிங்கு ராஜா வரை பல படங்களில் நடித்திருப்பவர் விமல்.

மினிமம் கியாரண்டி ஹீரோவாகியிருக்கும் அவர் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில், இதுவரை மினிமம் பட்ஜெட் படங்களாக நடித்திருக்கும் விமலுக்கும அடுத்தபடியாக தனது லெவலை உயர்த்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

அதனால் இதுவரை வெறும் நகைச்சுவை கலாட்டா கதைகளாக தேர்வு செய்து வந்தவர், இப்போது அதே காதல்- நகைச்சுவை என்றாலும் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும்படியான ஓரளவு பெரிய பட்ஜெட் படங்களாக தேடுகிறாராம்.

அத்துடன் முன்னணி ஹீரோயின்களுடன் தான் டூயட் பாட வேண்டும் என்ற ஆசையும் தொற்றிக் கொண்டுள்ளது.

தற்போது இவர் சேட்டை பட இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இவரிடம் முன்னணி ஹீரோயின்கள் யாரிடமாவது கால்ஷீட் வாங்குங்கள் என்று கூறியுள்ளாராம்.

விமலின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஹீரோயின்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறாராம்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: முன்னணி ஹீரோயின்களுடன் தான் டூயட் பாடுவேன்:விமல் Rating: 5 Reviewed By: gg