Latest News
Monday, November 4, 2013

எனக்கு அழகை தந்த என் பெற்றோருக்கு நன்றி

தனக்கு அழகை அளித்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் பாலிவுட் புயல் ஐஸ்வர்யா ராய்.

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது 40வது பிறந்தநாளை கடந்த 1ம் தேதி கொண்டாடினார்.

இவருக்கு குழந்தை ஆராத்யா தன்னுடைய மழலை மொழியில் பிறந்தநாள் வாழ்த்து கூறியது.

குழந்தை பெற்ற பின் நடிக்காமல் இருந்தவர், விரைவில் கணவர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடிக்கவிருக்கறார் என்று கூறப்பட்டது.

ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தனக்கு அழகை அளித்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், திருமணமாகி பெற்றோரை விட்டு பிரிந்து வந்துவிட்டால் நாம் உணர்ச்சிவசப்படுகிறோம்.

எனக்கு அருமையான வாழ்க்கை தந்த என் பெற்றோருக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவர்களுடன் செலிவட்ட நேரங்கள் தான் எனக்கு உலகம் என்று தெரிவித்தார்.

நான் நடிகை ஆவேன் என்று நினைக்கவே இல்லை, என் குடும்பத்திற்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை.

என் குடும்பம் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் குடும்பம், நான் அறிவியல் மாணவி.

சினிமாத் துறையில் சின்சியராக வேலை பார்க்கும் ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டுள்ளேன்.

இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், எனது கணவர் வீட்டில் உள்ளவர்கள் கலையை மதிப்பவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: எனக்கு அழகை தந்த என் பெற்றோருக்கு நன்றி Rating: 5 Reviewed By: gg