Latest News
Friday, January 10, 2014

உன் பொட்டலத்தை நாய் கவ்விடும்: விஜய்

படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் முன்னணி ஹீரோக்கள் நடிப்பதால் அவர்களது ரசிகர்களும் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு வெகு காலமாகவே உண்டு. சில ஹீரோக்கள் இது நல்ல கருத்துதானே என்று கூறினாலும், கதையில் வரும் கேரக்டர் சிகரெட் கேட்டால் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? விஜய்யும் அப்படியொரு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் ஜில்லாவில்.

இவர் சிகரெட் குடித்து புகையை வெளியே விடும் காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்தார்களாம் சென்சார் ஆபிசர்ஸ். இந்த காட்சி சற்று நீளமாக இருக்கிறது. அவர் புகைவிடும் காட்சியின் நீளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் அட்வைஸ் செய்ய, அந்த காட்சி குறைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்று படத்தில் சிகரெட் காட்சிகள் வரும்போதெல்லாம் ஒரு எச்சரிக்கை வாசகம் வருமே, அதை கூட இன்னும் போல்டு பண்ண சொன்னார்களாம் சென்சாரில்.

இப்படி சுமார் பத்து கட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் முக்கியமான கட் இதுதான். நடிகர் சூரியை விஜய் முக்கியமான இடத்தில் எட்டி உதைப்பது மாதிரி காட்சி. அவர் கால்களுக்கு நடுவில் பாயும் விஜய்யின் வேகத்தை கண்டு அதிர்ந்த சென்சார் அலுவலகர்கள், சூரியை காப்பாற்றிவிட்டார்கள். யெஸ்… அந்த காட்சியில் அடிவிழும் இடம் கட் செய்யப்பட்டுள்ளது. இதே மாதிரி பெண் போலீஸ் ஒருவர் சூரியை ‘அதே இடத்தில்’ தாக்கும் காட்சியும் கட் செய்யப்பட்டுள்ளது.

‘உன் பொட்டலத்தை நாய் கவ்விடும்’ என்று சூரியிடம் விஜய் பேசும் வசனம் ஒன்றும் கட் செய்யப்பட்டுள்ளதாம்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: உன் பொட்டலத்தை நாய் கவ்விடும்: விஜய் Rating: 5 Reviewed By: gg