Latest News
Friday, January 10, 2014

நம்ம அஜித் அண்ணாத்த யாருக்கு தெரியாம அந்த படத்த பார்த்தாரா!!!

அஜீத் ஆஸ்திரேலியா போயிருந்தாரல்லவா? அவர் திரும்பி வந்துவிட்டார். அங்கு சென்றதை மட்டும் சிறப்பாக எழுதி தள்ளியவர்களுக்கு அவர் வந்த விபரம் தெரிந்ததா, இல்லையா,? தெரியவில்லை. ஆனால் சென்னைக்கு வந்த அஜீத் வந்த நாளிலிருந்தே ‘வீரம்’ படத்தை பார்க்க ஆவலாக இருந்தாராம்.

நேற்று முன் அவருக்கு பிரசாத் லேப் தியேட்டரில் படம் போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது. அவருக்காகவே காத்திருந்து இரவு சுமார் 11.30 மணியளவில் படம் திரையிடப்பட, சரக்கென காரிலிருந்து இறங்கிய அஜீத், யாரும் பார்ப்பதற்கு முன் தியேட்டருக்குள் நுழைந்துவிட்டாராம். மொட்டை தலையில் கருப்பு தொப்பி. முகத்தை மறைத்து கட்டப்பட்ட கர்சீப் என்று தனது வருகையை யாரும் கவனித்தாலும், சட்டென தன்னை அடையாளம் தெரிந்து கொள்ளக் கூடாது என்கிற உணர்வுடன் அவர் நடந்து கொண்டதாக கூறுகிறார்கள்.

தியேட்டருக்குள் படம் ஓடுகிற நேரத்தில் கூட அவர் அந்த கர்சீப்பை அவிழ்க்கவில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் அவருடன் இயக்குனரும், இன்னும் சிலரும் இருந்திருக்கிறார்கள்.

படம் முடிந்த பின் இயக்குனரை தோளில் தட்டி பாராட்டிவிட்டு விறுவிறுவென காரில் கிளம்பி போய்விட்டாராம். ரசிகர்களை பொறுத்தவரை அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவரது நிழல் மனிதர்களுக்கு… அண்ணாத்த சென்னையிலதாங்க இருக்காரு.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நம்ம அஜித் அண்ணாத்த யாருக்கு தெரியாம அந்த படத்த பார்த்தாரா!!! Rating: 5 Reviewed By: gg