Latest News
Saturday, June 1, 2013

சிம்புவின் திருமணம் ஏறக்குறைய முடிஞ்சிடுச்சாம்

காதல் சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கிய சிம்புவை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தி வந்தனர். பல நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டாலும், நயன்தாரா-சிம்பு காதல் தான் பரபரப்பாகப் பேசப்பட்டது. சில நாட்களில் சிம்புவுடனான உறவை முறித்துக் கொண்ட நயன்தாரா, அதன் பின்னர் பிரபுதேவாவைக் காதலித்தார். இந்தக் காதலும் பாதியில் முறிந்து விட்டதால் தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் தான் சிம்புவுக்கு வேலூரில் பெண் பார்த்திருக்கிறார்கள் என்ற பேச்சு அடிபட்டது. சமீபத்தில் ரசிகர் ஒருவர் சிம்புவிடம் அண்ணா, உங்களுக்கு கல்யாணம் எப்பொழுது ட்விட்டரில் கேட்டிருக்கிறார். அதற்கு அது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று பதில் கூறி இருக்கிறார் சிம்பு. அப்படியென்றால் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா அல்லது பெண்ணைப் பார்த்து முடிவு செய்து விட்டார்களா என்று தெரியவில்லை.

கோடம்பாக்க மக்கள் மத்தியில் இந்த செய்தி தான் தற்போது வேகமாக பரவி வருகிறது.சமீப காலமாக சிம்பு ஆன்மீகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்று வேறு கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும் சிம்புவின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது மட்டும் புரிகிறது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சிம்புவின் திருமணம் ஏறக்குறைய முடிஞ்சிடுச்சாம் Rating: 5 Reviewed By: gg