Latest News
Friday, August 9, 2013

மீண்டும் நடிக்க வரும் ரொமான்ஸ் ஜோடி

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம்வரும் நடிகர் பிரசன்னாவும், சிநேகாவும் விரைவில் ஜோடி சேரப்போகிறார்களாம்.

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற தமிழ் படத்தின் மூலம் கணவன் மனைவியாக ஜோடி சேர்ந்த இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

தற்போது பிரசன்னா கல்யாண சமையல் சாதம், புலிவால் என்ற படத்திலும் சிநேகா உன் சமையல் அறையில் என்ற படத்தில் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு ஜோடி சேர்ந்த சிநேகா, பிரசன்னா ஜோடி தற்போது அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கப்போகிறார்களாம்.

கணவன் மனைவியாக ஜோடி சேர்வதால் இவர்களது ரொமான்ஸ் இந்த படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழில் படவாய்ப்புகள் அமைந்தால் ஜோடி சேர்வதற்கு தயாராக உள்ளனராம்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மீண்டும் நடிக்க வரும் ரொமான்ஸ் ஜோடி Rating: 5 Reviewed By: gg