கே.வி.ஆனந்த் – தனுஷ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறதல்லவா? தனுஷுடன் ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை யார் என்று இன்னும் முடிவாகாத நிலையில் இப்படத்தின் ஒரு சில காட்சிகளை கம்போடியா மற்றும் வியட்நாமில் படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். மாறுபட்ட கதை அமைப்பில், பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கும் இந்தப் படத்திறகு கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜே இசை அமைக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் என்றாலே மெலடி பாடல்கள் தான் ஸ்பெஷல்! ஆனால் இந்தப் படத்திற்காக தனது வழக்கமான ரூட்டிலிருந்து மாறி மாறுபட்ட வகையில் அதிரடி இசையை தர இருக்கிறாராம் ஹாரிஸ். அதில் இன்னொரு ஸ்பெஷலாக ஒரு குத்துப்பாடலும் உண்டாம்! இந்த கதைக்கு ஒரு சூப்பர் குத்துப் பாடல் வேண்டும் என்று கே.வி.ஆனந்த் கேட்டுக் கொள்ள, ஹாரிஸ் ஜெயராஜும் அமர்க்களமான ஒரு குத்துப்பாடலை உருவாக்கி இருக்கிறாராம்.

0 comments:
Post a Comment