சென்னை: திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலான ஜெனிலியா வாய்ப்பு கேட்டு தனக்கு பழக்கமான நடிகர்களுக்கு போன் போடுகிறாராம். ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் ஜெனிலியா. அடுத்த படத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். இந்தியில் இம்ரான் கானுடன் சேர்ந்து அவர் நடித்த ஜானே து யா ஜானே நா படம் சூப்பர் ஹிட்டானது. அவர் ஜெயம் ரவியுடன் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் சூப்பர் ஹிட் படமானது. அதன் மூலம் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது. மறுபடியும் விஜய்யுடன் சேர்ந்து வேலாயுதம் படத்தில் நடித்தார். விஜய்க்கு ஜோடி இல்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கிடையே அவர் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் அவர் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், பவன் கல்யாண், கோலிவுட்டில் விஜய், ஜெயம் ரவி ஆகியோருக்கு போன் போட்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
Thursday, September 5, 2013
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment