பெரும்பாலானோரிடம் உங்களுடைய தேவைகள் என்ன என்று கேட்டால், நன்றாக சம்பாதிக்க வேண்டும் , வார இறுதியில் ஜாலியா சுத்தனும். பிடிச்சத சாப்பிடனும் என்பார்கள். நல்ல ஆரோக்கியமான தேகம் வேண்டும் என சொல்பவர்கள் நம்முள் எத்தனை பேர் ?
ஆரோக்கியம் இருந்தால்தான் ஊர் சுற்ற முடியும். சம்பாதிக்க முடியும் என்பது உடலுக்கு ஏதாவது வந்தால்தான் உறைக்கிறது. என்னதான் நிறைய சுற்றம், பணம் இருந்தாலும் அனுபவிக்க ஆரோக்கியம் வேண்டுமே. ஆதலால் இனிமேலாவது ஆரோக்கியம் முக்கியம் என நினைத்திடுங்கள்.
நீங்கள் ஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ் :
சரியான உணவினை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் :
உங்கள் உடல் சம நிலையோடு , ஒழுங்குமுறையில் இயங்க , சரியான நேரத்தில் சாப்பிடுவது மிக மிக முக்கியம். தினமும் சாப்பிடுவதற்கு குறிப்பிட்ட நேரங்களை கடைபிடியுங்கள். அதே போல் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். அனைத்து சத்துக்களும் அடங்கும் உணவினை திட்டமிட்டு சாப்பிடுங்கள்.
அவசர அவசரமாய் உணவினை தயாரித்து ஏனோ தனோவென்று சாப்பிடாமல் நாளைக்கு தயாரிக்கும் உணவினை இன்றைக்கே முன்கூட்டியே திட்டமிடுங்கள்.அதுவே முக்கியமானது.
அதேபோல் விதவிதமாய் சாப்பிட வேண்டுமென்பதில்லை. ஒரே மாதிரியான உணவுகளை திரும்ப திரும்ப சாப்பிடலாம். இது எளிதாகவும் அதே சமயம் ஆரோக்கியமானதாக, உடலுக்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்கும்.
தினமும் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.நீரை பாட்டிலில் நிரப்பி ஒரு நாளைக்கு எத்தனை அளவு நீர் குடிக்கிறீர்கள் என பார்த்துக் கொள்ளுங்கள். நீரின் அளவு உடலில் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீரின்றி உடலும் அமையாது.
திடகாத்திரமாக நீண்ட ஆயுளில் வாழ்பவர்கள் எல்லாம் ஒரே மதிரியான எளிய உணவுகளையே, திரும்ப திரும்ப சாப்பிடுகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே வகை வகையாய் சாப்பிடவேண்டியதில்லை. எளிய சத்து நிறைந்த உணவுகளே போதுமானது.
உடற்பயிற்சியால் உற்சாகமடைவீங்க :
உடற்பயிற்சி ,நடனம் அல்லது யோகா அல்லது உங்களுக்கு விருப்பப்பட்ட விளையாட்டு என எதுவானாலும் சரி , உடலுக்கு நல்ல பயிற்சி தருவதை தினமும் கடைபிடியுங்க. நாள் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
அது உங்களுக்கு உற்சாகத்தை தரும். இதயம் வலுப் பெறும். தேகமும் உறுதி பெறும்.அன்னைக்கு முழுவதும் ரொம்ப ஹேப்பியா எல்லாரிடமும் நடந்துக்குவீங்க.
மதுவிற்கு ஸ்டே ஆர்டர் கொடுக்கலாமே :
குடிப்பதன் அளவு தெரியாமல் குடித்து, அதற்கு அடிமையாவது வாழ்வினையே பாதிக்கும். மது உடலுக்கு கேடு என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. அப்படியும் மது அருந்துவது தவிர்க்க முடியாதெனில் மிக மிக குறைந்த அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
இப்போதெல்லாம், நீங்கள் குடிக்கும் அளவினை மானிடர் செய்ய மொபைலில் நிறைய அப்ளிகஷன்கள் உள்ளன. அவற்றை டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டால், உங்கள் குடிப்பழக்கத்தை அதன் மூலமாக கட்டுப்படுத்தலாம்.
ஊட்டச்சத்தான உணவு, உடற்பயிற்சி ,நல்ல பழக்க வழக்கங்கள். வேறென்ன தேவை நிம்மதியாய் வாழ..வாழ்க்கை வாழ்வதற்குதான்.ஆனால் அதனை எப்படி அழகாய் வாழ்வது என நம் கையில்தான் உள்ளது. இவகைளை கடைபிடித்தால் போதும் உங்கள் எண்ணங்கள் வசப்படும் நாட்கள் தொலைவில் இல்லை.மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
http://ift.tt/1T0FAzS
0 comments:
Post a Comment