பொதுவா இனிப்பு வகை உணவுகளை சாப்பிட்டால் பற்கள் பாதிக்கும் என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் நாம் தீங்கில்லை என்று நினைத்து சாப்பிடும் உணவு வகைகள் நம் பற்களுக்கு எதிரி என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி ஆவீர்கள்.அவை என்னென்ன என்று பார்ப்போமா?
பாஸ்தா ஸாஸ்:
பாஸ்தா ஸாஸ் எல்லோரும் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். பாஸ்தாவிற்கு என்றில்லாமல், ஸ்பகடி, பர்கர், பிரட், சப்பாத்தி என எல்லாவற்றிற்கும் ஸாஸ் போட்டு சாப்பிடுகிறோம். அந்த ஸாசில் தக்காளி அதிகம் சேர்க்கப்படுகிறது.
தக்காளியில் அதிக அமிலத்தன்மை கொண்டுள்ளதால் அதனை அதிகமாக உட்கொள்ளும்போது, பற்களை பாதிக்கும். மேலும் அதில் நிறத்தினைக் கொடுக்கும் பொருட்கள் சேர்ப்பதால் அவைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது, பற்களில் கரையை ஏற்படுத்திவிடும்.
ஆப்பிள் :
ஆப்பிள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது என உங்களுக்கு தெரியும்.ஆனால் அது பற்களை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆப்பிள் அமிலத்தன்மை கொண்டது. அவை பற்களின் எனாமலை பாதிக்கும். ஆகவே ஆப்பிள் சாப்பிட்டதும் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும்.
பீநட் பட்டர்:
கடைகளில் இப்போது விற்கும் பீநட் பட்டர்க்கு ஏகப்பட்ட வரவேற்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ஆனால் அவைகளில் அதிக அளவு சர்க்கரை சேர்ப்பதால், பற்களில் பேக்டீரியா ஏற்பட வாய்ப்புள்ளது. அவை பற்களில் ஒட்டிக் கொள்ளும். எளிதில் போகாது. நாளடைவில் பற்சிதைவிற்கு இந்த பீநட் பட்டர் காரணமாகும்.
ஊறுகாய் :
கடைகளில் விற்கும் ஊறுகாய் பேக்குகளில் கெடாமல் இருப்பதற்காக, வினிகர் மற்றும் பிரசர்வேட்டிவ் சேர்க்கிறார்கள்.அவை பற்களிலுள்ள எனாமலைப் போக்கும். பல்கூச்சத்தையும் ஏற்படுத்தும். ஆகவே ஊறுகாய் சாப்பிட்டபின் நிறைய நீர் குடித்தால் ,பல் கூச்சம் வருவதை தடுக்கலாம்.
இருமல் நிவாரணிகள்:
இனிப்பு வகைக்குதான் பற்கள் பாதிக்க வேண்டும் என்பதில்லை. நாம் இருமலுக்கு எடுத்துக் கொள்ளும் மிட்டாய் மற்றும்,டானிக்கினாலும் பற்கள் பாதிப்பு அடைகிறது என தெரிய வந்துள்ளது.
நிறமுள்ள பழங்கள் :
அதிக நிறமுள்ள பழங்களும் ஒருவகையில் பற்கள் பாதிப்படைய காரணமாகின்றன என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம். மாதுளை,கருப்பு திராட்சை, செர்ரி பழங்கள்,பெர்ரி வகைப் பழங்கள் ஆகியவை உங்கள் பற்களில் கரையை ஏற்படுத்துகின்றன.
பல் கூச்சத்தையும் தருகின்றன. இந்த மாதிரியான அடர்ந்த நிறங்கள் கொண்ட பழங்களை சாப்பிட்டதும் உடனே வாய்க் கொப்பளிக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆகவே நீங்கள் சாப்பிடும் உணவுவகைகள் உடலுக்கு நல்லது விளைவிக்க கூடியது என்றாலும் அவைகள் பற்களுக்கு தீங்கு தரலாம். அதற்காக அந்த உணவுவகைகளை சாப்பிடக் கூடாது என்றில்லை. சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்க வேண்டியது அவசியம்.
நம் முக அழகை பற்கள்தான் தீர்மானிக்கின்றன. அந்த பற்களை நாம் பத்திரமாக பார்த்துக் கொண்டால் ,சீக்கிரத்தில் பல்செட் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது.
http://ift.tt/24JtDte
0 comments:
Post a Comment