சீனாவில் ஆச்சர்யம் அளிக்கும் வடிவத்தில் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 1,200 பேர் பயணிக்கலாம்
சீனாவில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் தயாரிக்கப்படும் புதிய பேருந்தின் வடிவம் வியப்பூட்டும் வகையில் உள்ளது.
சாலையில் கார்கள் சென்றாலும் அதன் மேலாக செல்லும் வகையில் இந்த பேருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் ஒரே நேரத்தில் 1,200 பேர் வரை பயணிக்கலாம். புதிய தொழில்நுட்பத்தில் சீனாவில் இயக்கப்படவுள்ள இந்த பேருந்தின் முழுமையான வடிவம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
பேருந்தின் சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment