Latest News
Tuesday, May 10, 2016

ஆணுறுப்பில் துர்நாற்றமும், புண்ணும் ஏற்பட காரணங்கள் என்னவென்று தெரியுமா?

ஒவ்வொரு ஆணும் ஆணுறுப்பை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பாலியல் வாழ்க்கையில் பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும். ஆணுப்பில் ஆண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். அதில் ஆணுறுப்பில் ஏற்படும் துர்நாற்றமும், புண்ணும் முக்கியமான ஒன்று.

இப்படி ஆணுறுப்பில் துர்நாற்றம் மற்றும் புண் ஏற்படுவதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்கு ஆணுறுப்பில் துர்நாற்றமும், புண்ணும் ஏற்படுவதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

ஸ்மெக்மா

ஆண் குறியின் முனைகளில் உள்ள தோல் மடிப்புக்களில் இயற்கையாக கொழுப்புப் பொருள் சுரக்கப்படும். இதனை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக குளிக்கும் போது அப்பகுதியை நன்கு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அப்பகுதியில் ஸ்மெக்மாவின் சுரப்பு அதிகரித்து, பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்தை அதிகரித்து, துர்நாற்றத்தையும், நோய்த்தொற்றுக்களையும் உண்டாக்கும்.

ஈஸ்ட் தொற்று

ஈஸ்ட் தொற்று பெண்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என்று யார் சொன்னார்கள். ஆண்களும் தங்களின் ஆணுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், ஈஸ்ட் தொற்றினால் கடுமையான துர்நாற்றத்தையும், அரிப்பையும், சில சமயங்களில் வலியையும் அனுபவிக்கக்கூடும்.

வியர்வை

காற்றோட்டமில்லாத இடத்தில் ஏற்படும் அதிகமாக வியர்க்கும். அப்படி உடலில் பிறப்புறுப்பு பகுதிகளில் காற்றோட்டம் இல்லாமல் வியர்வையுடனேயே இருந்தால், அப்பகுதியில் துர்நாற்றம் இருந்தவாறே இருக்கும். ஆகவே தினமும் பலமுறை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

பாலியல் தொடர்பான நோய்கள்

பால்வினை நோய்களான மேக வெட்டை அல்லது கிளமீடியா போன்றவை அதிகமாக வெள்ளையான திரவத்தை உற்பத்தி செய்வதோடு, கடுமையான துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.

வறட்சி

அளவுக்கு அதிகமாக ஸ்மெக்மாவின் தேக்கத்தினால் மட்டுமின்றி, அதிகப்படியான வறட்சியும் துர்நாற்றத்தை உண்டாக்கும். எப்படியெனில் ஆணுறுப்பின் மேல் போதிய ஈரப்பசை இல்லாமல் இருந்தால், வெடிப்புக்கள் ஏற்பட்டு, அதுவே கிருமிகளின் வளர்ச்சியை அதிகரித்து, மோசமான துர்நாற்றத்தை உண்டாக்கும்.

இறுக்கமான உள்ளாடை

சிந்தடிக் துணியாலான உள்ளாடையை அணிந்தால், அப்பகுதியில் வெளியேறும் வியர்வை உறிஞ்சப்படாமல், அப்பகுதி ஈரப்பசையுடன் இருந்து, பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, அதன் காரணமாக அப்பகுதி துர்நாற்றத்துடனும், சில நேரங்களில் அரிப்பையும் உண்டாக்கும். ஆகவே எப்போதும் காட்டன் துணியாலான உள்ளாடையை அணிவதே சிறந்தது.

Let's block ads! (Why?)



http://ift.tt/1ZAxd1W
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஆணுறுப்பில் துர்நாற்றமும், புண்ணும் ஏற்பட காரணங்கள் என்னவென்று தெரியுமா? Rating: 5 Reviewed By: Unknown