Latest News
Wednesday, May 11, 2016

இந்திய நடிகர், நடிகைகள் உடல் எடையை குறைக்க என்னென்ன செஞ்சாங்க தெரியுமா?

உடல் எடை குறைப்பது என்பது அவ்வளவு கடினமா என்றால்? ஆம் என்பது தான் பலரின் பதில். பலருக்கும் மனதில் இருக்கும் அந்த வேகம், உடல் செயலில் வருவது இல்லை. உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பார்கள், ஆனால் செயலில் கோட்டைவிட்டு விடுவார்கள்.

தமிழ் பிரபலங்களும்... அவர்களின் பிட்னஸ் மந்திரங்களும்....

உடல் எடை குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சி இரண்டும் 50:50 தேவைபடுகிறது. வெறும் பயிற்சி அல்லது டயட் என இரண்டில் ஒன்று மட்டும் என்றும் பயனளிக்காது. ஜிம் மட்டுமின்றி, நடனம், நீச்சல், குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளின் மூலமாக கூட உடல் எடையைக் குறைக்கலாம்.

நடிகை அனுஷ்கா இன்னும் சிக்கென்று இருப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா?

இனி, நமது பாலிவுட் பிரபலங்கள் எப்படி தங்கள் உடல் எடையை குறைத்தார்கள் என்பது குறித்து பார்க்கலாம்....

அர்ஜுன் கபூர்

அர்ஜூன் கபூரின் உடல் எடை குறிப்பு சற்று வியக்க வைக்கிறது. இவர் 140 கிலோவில் இருந்து உடல் எடையை குறைத்து இன்று உடலை கட்டுக்கோப்பாக பேணிக்காத்து வருகிறார். இந்த மாற்றத்திற்கு காரணம், இவர் இன்று வரை தொடர்ந்து செய்து வரும் 20 நிமிடங்கள் க்ராஸ்ஃபிட் பயிற்சிகளும், ஏப்ஸ் எனப்படும் அப்டமன் பயிற்சிகளும் தான்.

சோனாக்ஷி சின்ஹா

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு சோனாக்ஷி சின்ஹா ஏறத்தாழ 90 கிலோக்கு அதிகமாக இருந்தார். இவர் உடல் எடை குறைக்க பின்பற்றிய பயிற்சிகள் நீச்சல், டென்னிஸ், யோகா மற்றும் கார்டியோ பயிற்சிகள் ஆகும். மேலும், இவர் மிகுந்த கட்டுப்பாடான டயட்டை மேற்கொண்டார்.

சோனம் கபூர்

இப்போது பார்க்க ஒல்லியாக இருந்தாலும், நடிக்க வருவதற்கு முன்பு 86 கிலோ எடையில் சற்று ஜப்பியாக தான் இருந்தார் சோனம். இவர் பிலேட்ஸ் மற்றும் யோகா பயிற்சியின் மூலமும், கதக் நடன பயிற்சியின் மூலமும் உடல் எடையை குறைத்தார்.

கரீனா கபூர்

சைஸ் ஸீரோவில் இருந்த கரீனாவை தான் இப்போது பலருக்கு தெரியும். அதற்கு முன் 90-களில் எடை அதிகமாக இருந்த கரீனாவை எல்லாரும் மறந்தே போயிருப்பார்கள். இவர், சமமான டயட் மற்றும் யோகாவின் மூலமாக உடல் எடையை குறைத்தார்.

பர்நிதி சோப்ரா

ஜாக்கிங், குதிரை ஏற்றம், நீச்சல், ஓட்டப்பயிற்சி போன்றவற்றின் மூலமாக உடல் எடையை குறைத்தார். மற்றும் இவர் துரித உணவுகள் உண்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார்.

ஆலியா பட்

பதின் வயதுகளில் சற்று ஜப்பியாக இருந்த ஆலியா கதக் மற்றும் பாலே நடன பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைதாராம். மேலும், இவர் எடை தூக்கும் பயிற்சியும் மேற்கொண்டார்.

ஐஸ்வர்யாராய்

குழந்தை பிறந்த பிறகு அதிகரித்த உடல் எடையை டயட்டின் மூலமாக குறைத்துள்ளார் ஐஸ். பிரவுன் ரைஸ், பச்சை காய்கறிகள், பழங்கள், சிறிய அளவில் உணவு உண்பது என சீரிய டயட்டின் மூலமாக உடல் எடையை குறைத்துள்ளார் ஐஸ்.

இஷா தியோல்

தூம் படத்தில் பக்காவான உடற்கட்டில் இருந்த இஷா தியோல். அதற்காக ஓராண்டு காலம் பயிற்சிகள் மேற்கொண்டார். கிக் பாக்ஸிங் பயிற்சிகள் எல்லாம் செய்து தான் அந்த உடற்கட்டை பெற்றாராம் இஷா தியோல்.

Let's block ads! (Why?)



http://ift.tt/1qcUrPC
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: இந்திய நடிகர், நடிகைகள் உடல் எடையை குறைக்க என்னென்ன செஞ்சாங்க தெரியுமா? Rating: 5 Reviewed By: Unknown