சிங்கம் டா...’ என ஆண்கள் காலரை தூக்கிவிட்டப்படி கெத்து காட்டுவதுண்டு. உண்மையிலேயே ஆம்பள சிங்கம் வேட்டைக்கு செல்லாமல், பெண் சிங்கம் கொண்டு வரும் இரையை சாப்பிட்டு விட்டு வெட்டி பந்தா காட்டும் அவ்வளவு தான்.
சிங்கம் நாம் நினைப்பதை விட பல மடங்கு பிரம்மாண்டமானது. ஆனால், பூனை குடும்பத்தை சேர்ந்த சிங்கம், தீக்கோழி உதைத்தால் கூட உயிரிழந்துவிடுமாம். முள்ளம்பன்றி கூட சிங்கத்தை எதிர்த்து சண்டையிடுமாம்.
பூனை குடும்பத்தில் இருக்கும் புலியில் இருந்து சிங்கம் வரை அனைத்து விலங்குகளுக்கும் இனிப்பை சுவைக்கும் திறன் கிடையாது. அதாவது, இனிப்பு ருசியை உணர முடியாதாம்.
சிங்கங்களின் கூட்டத்தை எதிர்த்து சண்டையிடும் துணிச்சல் முள்ளம்பன்றிக்கு இருக்கிறது. சிங்கம் கர்ஜிக்கும் சப்தம், 8 கிலோமீட்டர் வரை எதிரொலிக்கும் திறன் கொண்டது.2005-ம் ஆண்டு எத்தியோப்பியாவில் ஓர் இளம் பெண்ணை ஏழு ஆண்கள் மிக கொடுமையாக தாக்கிகொண்டிருந்தனர். அப்போது ஓர் சிங்கக் கூட்டம் அவர்களை விரட்டிவிட்டு, அந்த பெண்ணுக்கு உதவ ஆள் வரும் வரை உடன் இருந்தன என்பது ஆச்சர்யமான ஓர் செய்தி!
காட்டில் வாழும் ஆண் சிங்கம் பத்தில் இருந்து பதினான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும். பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும். ஆண் சிங்கங்களின் மீது தான் அதிக ஈர்ப்புக் கொள்ளுமாம். பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்து இரண்டாவது பெரிய விலங்கு சிங்கம்.
சராசரியாக ஓர் ஆண் சிங்கம் 250 கிலோ வரை இருக்கும். சிங்கங்களில் வேட்டையாடுவதில் 90 சதவிகிதம் பெண் சிங்கங்கள் தான். ஆண் சிங்கங்கள் மிகவும் அபூர்வமாக தான் வேட்டைக்கு செல்லும். மலை சிங்கங்கள் அதனுடைய இரையை புதைத்து வைத்துவிட்டு, பசிக்கும் போது மீண்டும் எடுத்து உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது.

0 comments:
Post a Comment