மஞ்சளோட மகிமையை நம்ம தமிழ் நாட்டுக்கு தெரியாம வேற யாருக்கு தெரியும்.அந்த காலத்துலேயே சருமத்திற்கு மஞ்சள் பூசி அதன் முக்கியத்துவத்தை உலகத்துக்கே அறிவிச்சவங்க நம்ம தமிழ் பெண்கள்.
கிருமி நாசினி,நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்யும். புண்களை ஆற்றும் மருந்து. அலர்ஜி , காயம், தேமல் போன்ற சருமப் பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணி . அதுமட்டுமில்லாமல் 300 மேற்பட்ட ஆன்டி ஆக்ஸிடென்டுகளை கொண்டுள்ளதாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. எந்த சமையல் செய்தாலும் அதில் மஞ்சள் சேர்க்காமல் நாம் சமைப்பதில்லை.
இப்படிபட்ட மஞ்சளை ஜூஸாகவும் குடிக்கலாம் என்பது தெரியுமா?
மஞ்சள் ஜூஸ் செய்யும் முறை :
ஃப்ரஷான சில மஞ்சள் கிழங்குகளை துண்டுகளாக்கவும். துண்டுகளை மிக்ஸியில் போட்டு கூழாக்கவும். அதனை ஒரு ஜாரில் வைத்து 2 நாட்களுக்கு பயன் படுத்தலாம். மிக்ஸியில் சரியாக அரைபடாது என நினைப்பவர்கள், மஞ்சள் கிழங்கை துருவி , சீஸ்துணியில் அல்லது மஸ்லின் துணியில் போட்டு சாறினை பிழிந்து கொள்ளலாம்.
இப்போது மஞ்சள் ஜூஸிலிருந்து 2 ஸ்பூன அளவு எடுத்து ஒரு ஜாரில் ஊற்றி அதனுடன் 1-2 ஸ்பூன் எலுமிச்சை சாறு , சிறிது இஞ்சி சாறு , 2 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து அதனுடன் 2 கப் நீரினை சேர்த்து நன்றாக குலுக்கவும். அதனுள் ஐஸ் கட்டியை போட்டு சில்லென்று பரிமாறலாம். ஃப்ரிட்ஜில் வைத்து மறு நாள் வரை குடிக்கலாம் .
ஆர்த்ரைடிஸ் வலியை குறைக்கிறது :
மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் மற்றும் ருமடாய்ட் ஆர்த்ரைடிஸினால் வரக் கூடிய வீக்கத்தினையும் வலியையும் குறைக்கிறது.
அல்சீமர் நோயில் வரும் வலியினை நிவர்த்தி செய்கிறது:
அல்சீமர் நோயில் படிப்படியாக ஞாபக சக்தி குறைந்து போகும். அந்த நோய் தீவிரமாக உறுப்புகளில் வீக்கத்தினை ஏற்படுத்தும் . இந்த நோயில் மஞ்சள் மிகவும் நன்மை அளிக்கிறது. மஞ்சள் மூளையில் வலியை உண்டாக்கக்கூடும் காக்ஸ்-2 என்ற என்சைமின் செயலைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் வலிகள் குறைந்து நிவாரணம் அளிக்கிறது.
புற்று நோய் வராமல் தடுக்கிறது :
மஞ்சளில் உள்ள கர்க்யூமின் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலிலுள்ள ஃப்ரீ ரேடிகள் எனப்படும் உடலில் உருவாகும் வேண்டாத மூலக்கூறுகளை அழித்து நம்மை கேன்சரிலிருந்து காக்கிறது. அந்த வகையில் இந்த மஞ்சள் ஜூஸ் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடெண்டுகளை நேரடியாக கிடைக்கச் செய்கிறது.
ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது:
நம் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளான வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், வாய்வு மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு மஞ்சள் ஜூஸினை தொடர்ந்து உட்கொள்ளும்போது தீர்வு காணலாம்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது:
மஞ்சள் கல்லீரலிருந்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி, இதயத்தில் அதிகரிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
சர்க்கரை அளவை கட்டுபடுத்துதல் :
சர்க்கரை வியாதிக்கு இந்த மஞ்சள் ஜூஸ் மிக நல்லதாகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப் படுத்துகிறது. ஒரு கப் நீரில் , 1 ஸ்பூன் மஞ்சள் ஜூஸ் , கால் ஸ்பூன் மிளகுப் பொடி சேர்த்து குடித்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
காயத்தினை ஆற்றும் :
மஞ்சளில் உள்ள ஆன்டி ஆகிஸிடென்ட் காயத்தினை ஆற்றும். முகப்பரு, முகப்பருவினால் வரும் தழும்பு ஆகியவைகள் நீங்கும். சில துளி மஞ்சள் ஜூஸ் எடுத்து முகப்பரு, மற்றும் காயமுள்ள இடங்களில் தடவ வேண்டும்.
சருமம் பொலிவுற :
சருமத்திற்கும் மஞ்சளிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. சருமத்தில் சேரும் அழுக்குகளை அகற்றி, தொற்றுக்கள் ஏற்படாமல் பொலிவாக வைத்துக் கொள்ளும். இந்த மஞ்சள் ஜூஸினை முகத்தில் பேக்காக வாரம் இருமுறை போட்டு பயன் பெறலாம்.
http://ift.tt/1WUtVHM
0 comments:
Post a Comment