அந்த காலத்தில் நம் தாத்தாக்களெல்லாம் செம்பு பாத்திரங்களில்தான் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள்.அதில்தான் குடிப்பார்கள்.இப்போதும் கோவில்களிலும்,பூஜைகளிலும் செம்பு பாத்திரங்களில்தான் தீர்த்தம் கொடுக்கப்படும்.நாம் வீட்டில் பேருக்காக காப்பர் பாட்டம் கொண்ட பாத்திரங்களை வாங்கி சமைக்கின்றோம்.காப்பர் பாட்டம் கொண்ட பாத்திரங்கள் நிஜமான செம்பு அல்ல.ரசாயனம் கலந்தவை.
எதற்காக செம்பு நல்லது?
அந்த காலத்தில் இரவு தூங்குவதற்கு முன் ,செம்பிலான சொம்பில் நிறைய தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டு மறு நாள் காலையில் அதனை குடிப்பார்கள்.காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள்செய்யவில்லை.குறைந்தது 8 மணி நேரமாவது நீர் செம்புப் பாத்திரத்தில் இருக்க வேண்டும். அதன்பின்னே குடிக்க வேண்டும்.ஏனெனில் நீர் செம்புடன் வினை புரிந்து மிக நல்ல விளைவுகளை நமக்கு தருகிறது.
செம்பு தரும் நன்மைகள்:
செம்பு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை குறிப்பாக டயாரியாவிற்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது. செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை குடிக்கும்போது அது ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
குடலில் ஏற்படும் தொற்று மற்றும் அதனால் உண்டான வீக்கத்தை குணப்படுத்துகிறது. வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை கட்டுபடுத்தி ,அசிசிடியைத் தடுக்கிறது.செம்பு நீர், கல்லீரல் மற்றும் கிட்னியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
உடலில் தங்கும் கொழுப்பினை குறைக்கிறது. முறையான உடற்பயிற்சியுடன் செம்பு நீரும் குடித்தால், ஆரோக்கியமான உடலைப் பெறலாம். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், செம்பு பாத்திரங்களில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் உள்ளது. அவை உடலில் உருவாகும் ஃப்ரீ ரேடிகள்ஸை அழித்து , முதுமை அடைவதை தடுத்து இளமையை நீட்டிக்கச் செய்கிறது.
செம்பு நீர் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. அதேபோல் சத்துக்களை ரத்தத்தில் உறிஞ்சுகொள்ள உதவிபுரிகிறது. இன்னும் செம்பு நீரின் முக்கியமான நன்மை என்னவென்றால் அது மூளையின் செயல்திறனை தூண்டுகிறது. புத்தியின் வேகம் கூடி , அறிவாற்றல் பெருகும்.
இத்தனை நன்மைகளைக் கொண்ட செம்புப் பாத்திரங்களை இனிமேலாவது நாம் உபயோகபடுத்த வேண்டும். எனவே டியர் லேடிஸ் அண்ட் ஜென்டில்மென். உடலுக்கு கெடுதலை மட்டுமே தரும் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிப்பதை இனிமே விட்டுவிட்டு, செம்பு பாத்திரங்களில் குடியுங்கள். நாம் இயங்க ஆதாரமான இந்த உடலுக்கு நன்மைகளையே கொடுத்திடுங்கள். உங்கள் வாழ்வு இன்னும் மேம்படட்டும்.
http://ift.tt/21S1E5p
0 comments:
Post a Comment