Latest News
Monday, May 9, 2016

உங்களுக்கு பொட்டாசியம் குறைபாடு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

இன்றைய காலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் தான் முதன்மையான காரணமாகும். மேலும் பலருக்கும் தங்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளால் தான் ஒருசில பிரச்சனைகளை சந்திக்கிறோம் என்பது தெரியாமல், முற்றிய நிலையில் மருத்துவரை சந்திக்கிறார்கள்.

இப்படி முற்றிய நிலையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை அறிந்தால், அதனால் தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அதில் உடலில் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவை சீராக பராமரிக்கவும், இதயத்தின் சீரான செயல்பாட்டிற்கும் பொட்டாசியம் மிகவும் இன்றியமையாதது.

இத்தகைய பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு உஷாராகிக் கொள்ளுங்கள்.

தசைப் பிடிப்புகள்

உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருக்கம் போது, தசைகளின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, அதனால் தசை பலவீனம், தசைப் பிடிப்புகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இது அப்படியே முற்றினால், தசைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தாங்க முடியாத அளவிலான வலிகளை சந்திக்க வேண்டி வரும்.

இதய படபடப்பு

இதயத் தசைகளின் செயல்பாடு ஒரு சிறப்பான கடத்தல் அமைப்பினால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருக்கும் போது, அதனால் அடிக்கடி படபடப்புடன் இருப்பதை உணர்வீர்கள்.

செரிமான பிரச்சனைகள்

நிறையப் பேருக்கு மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புச பிரச்சனைகள் வருவதற்கு பொட்டாசிய குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியாது. ஆம், உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவாகும் போது, வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்கக் கூடும்.

மயக்கம் மற்றும் தலைச்சுற்றல்

பொட்டாசியத்தின் அளவு உடலில் குறைவாக இருக்கும் போது, உடலின் நீரளவு மற்றும் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவில் இடையூறு ஏற்படும். இதன் காரணமாக அதிகளவில் சிறுநீர் கழிக்க நேரிட்டு, இரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

முடி உதிர்வது

ஆம், பொட்டாசியக் குறைபாட்டினாலும் அதிகப்படியான தலைமுடியை இழக்கக்கூடும். எனவே உங்களுக்கு தலைமுடி அதிகம் உதிர்ந்தால், பொட்டாசியம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டு வாருங்கள். இதனால் முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

மிகுதியான சோர்வு

நீங்கள் வேலை எதுவும் அதிகம் செய்யாமல் இருந்து அல்லது அதிகமாக உடற்பயிற்சி செய்யாமல் இருந்து, மிகுதியான சோர்வை உணர்ந்தால், உங்களுக்கு பொட்டாசிய குறைபாடு உள்ளது என்று அர்த்தம். ஆகவே மருத்துவரை சந்தித்து, பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது

பொட்டாசிய குறைபாட்டினால் சிறுநீரகங்களால் சரியாக உடலின் நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்க முடியாமல் போய், அதன் காரணமாக தாகத்தை உணரக் கூடும் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும்.

மனரீதியான பிரச்சனைகள்

உடலில் பொட்டாசியம் அளவு மிகவும் குறைவாக இருக்கும் போது, எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல், குழப்பமான மன நிலையுடன், எதிலும் கவனம் செலுத்த முடியாமல், மன இறுக்கத்துடன் இருப்பது போல் உணரக்கூடும். இம்மாதிரியான நிலையை நீங்கள் சந்தித்தால், ஒரு சிறு இரத்த பரிசோதனை மூலம் உங்கள் உடலில் இருக்கம் பொட்டாசிய அளவைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Let's block ads! (Why?)



http://ift.tt/1Zwgn4j
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: உங்களுக்கு பொட்டாசியம் குறைபாடு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்! Rating: 5 Reviewed By: Unknown