உடல் எடை கூடாமல் இருக்க சன்னி லியோன் பின்பற்றும் டயட் இது தானாம்!
சன்னி லியோன் என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தோன்றும். ஆனால், அனைவருக்கும் பொதுவாக தோன்றும் எண்ணம், "எப்படி இவர் இவ்வளவு வருடங்களாக இப்படி தன் உடலை ஒரே நிலையில் பேணிக்காக்கிறார்.." என்பது தான்.
ஆம், ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சன்னி லியோனிடம் மாறாமல் இருப்பது அவரது கவர்ச்சியான முகமும், மாறாத உடல் அமைப்பும் தான். இதற்கு காரணம் அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் டயட்டும், ஃபிட்னஸ் பயிற்சிகளும் தான்.
இனி, சன்னி லியோனின் டயட் மற்றும் பிட்னஸ் ப்ளான் என்ன என்பது பற்றி காண்போம்....
சன்னி லியோனின் டயட்!
இளநீர்
தினமும் இளநீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சன்னி. இது உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும். உடற்சக்தியை அதிகரிக்கவும் பயனளிக்கிறது. மேலும், இது முகத்தை பொலிவுடன் பராமரிக்க உதவுகிறது.
சன்னி லியோனின் டயட்!
பால்
காலை உணவுடன் பாலும் சேர்த்துக் கொள்கிறார் சன்னி. இது பசியை கட்டுப்படுத்தும். உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
சன்னி லியோனின் டயட்
காய்கறிகள்
இடைவேளைகளில் சிறுதீனி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்பதை தவிர்த்து. வேக வைத்த காய்கறிகள் உண்பதே சிறந்தது என்கிறார் சன்னி லியோன்.
சன்னி லியோனின் டயட்!
துரித உணவுகள்
என்ன தான் ருசியாக இருந்தாலும், பசியாக இருந்தாலும் துரித உணவுகளிடம் இருந்து விலகியே இருங்கள் என கூறுகிறார் சன்னி லியோன். ஏனெனில், இது நீங்கள் செய்யும் உடற்பயிற்சிக்கு எந்த பலனும் ஏற்படாமல் செய்து விடும்.
சன்னி லியோனின் டயட்!
காபி
காபி குடிக்காமல் இருக்க முடியவில்லை எனில், கருப்பு காபி குடிக்க பழகுங்கள் என பரிந்துரைக்கிறார் சன்னி லியோன்.
சன்னி லியோனின் டயட்!
தண்ணீர் பாட்டில்
நீங்கள் எங்கு வெளியே சென்றாலும் ஓர் தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்து செல்லுங்கள் என்கிறார் சன்னி. இது உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் தடுக்கவும். இடைவேளையில் சிறுதீனி உண்ணாமல் தடுக்கவும் உதவும் என்கிறார்.
சன்னி லியோனின் ஃபிட்னஸ் !
ஜிம்
எவ்வளவு பிஸியாக இருந்தாலும், வாரத்திற்கு மூன்று முறையாவது ஜிம்முக்கு சென்றுவிடுவாராம் சன்னி. சன்னி, ஜிம்முக்கு செல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாது என நம்புகிறார்.
சன்னி லியோனின் ஃபிட்னஸ் !
யோகா
ஜிம்முக்கு செல்வது எப்படி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறதோ, அவ்வாறு யோகா செய்வது மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உடல் மற்றும் மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது என சன்னி கூறுகிறார்.
சன்னி லியோனின் ஃபிட்னஸ் !
பிலேட் உடற்பயிற்சி முறை
உடலின் வளைவு தன்மை ஆரோக்கியமாக இருக்க, தசை வலிமையை அதிகரிக்க இந்த பிலேட் உடற்பயிற்சி முறைகளை செய்து வருகிறாராம் சன்னி லியோன். இது உடற்சக்தியை ஊக்கப்படுத்த பயனளிக்கிறது.
சன்னி லியோனின் ஃபிட்னஸ் !
ஸ்குவாட் பயிற்சி
உட்கார்ந்து எழுந்து பயிற்சி செய்யும் ஸ்குவாட் பயிற்சிகளை தினமும் தொடர்ந்து செய்வராம் சன்னி லியோன். இது இடுப்புக்கு கீழ் உடலை வலுப்படுத்தவும். உடலை வடிவாக பேணிக்காக்கவும் உதவுகிறது.
சன்னி லியோனின் ஃபிட்னஸ் !
லாஞ்சஸ் (Lunges)
லாஞ்சஸ் என்பது மாறுப்பட்ட உடற்பயிற்சி முறையாகும். கால் மற்றும் தொடை பகுதி தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இந்த பயிற்சியில் நிறைய பிரிவுகளும், வகைகளும் இருக்கின்றன.
சன்னி லியோனின் ஃபிட்னஸ் !
நடைப்பயிற்சி
தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்வாராம் சன்னி லியோன். மற்ற பயிற்சிகளை விட நடைப்பயிற்சி ஒன்று தான் உடலில் உள்ள அனைத்து தசைகளுக்கும் வேலைக் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment