சென்னையை விமான நிலையம் அருகே மெட்ரோ ரெயில் பணிக்காக தூண் அமைக்கப்படுள்ளது. . சுமார் 70 அடி உயரம் கொண்ட இந்த தூணின் இடைப்பகுதியில் ஒரு நாய் 15 நாட்களாக சிக்கிக்கொண்டு கத்தியபடி இருந்தது. இதனைக் கண்ட அந்த பகுதி ஆட்டோ டிரைவர்கள், கிண்டியில் உள்ள புளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள், விமான நிலைய போலீசார், ஆட்டோ டிரைவர்கள் உதவியுடன் நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலே ஏறி நாயை பிடிக்க முயன்றால் அது பயந்து போய் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தூணின் அடியில் அனைவரும் வலையை பிடித்துக்கொண்டு நின்றனர்.
பின்னர் புளூ கிராஸ் அமைப்பினர் தூணின் மேலே சென்று நாயை பிடிக்க முயன்றனர். பயந்து போன நாய் அங்கிருந்து தவறி கீழே இருந்த வலையில் விழுந்தது. உயிருடன் மீட்கப்பட்ட அந்த நாய்க்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment