சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி காலை, சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளார் சுவாதி மர்ம நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பொது மக்கள் அதிகம் கூடம் ஒரு இடத்தில் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஒரு பக்கம் கொலைகள் மறுபக்கம் கொள்ளைகள் என்று தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது எதிர்கட்சியான திமுக கோபம் தெரிவித்தது. இதையடுத்து, சுவாதி படுகொலை மற்றும் மற்ற கொலை சம்பவங்கள் குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஜெயலலிதா கொந்தளித்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை தலைமை செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், உளவுப் பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி, டி.ஜி.பி. அசோக்குமார் ஆகியோரை வரவழைத்து அவர்களிடம் ஆலோசனை செய்துள்ளார் ஜெயலலிதா. அப்போது, அவர்களிடம் முதல்வர் காட்டமாக பேசினார் என கூறப்படுகிறது.
அதிகாரிகளிடம் பேசிய முதல்வர் “கொலை கொள்ளை இல்லாத நாளே இல்லை, என்ன நடந்திட்டு இருக்கு இங்க.. சட்டம் ஒழுங்கு சரி இல்லைன்னு எதிர்கட்சிகள் அறிக்கை விடுறாங்க.. எதுக்கும் பதில் சொல்ல முடியல. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்திட்டே இருக்கு. இவ்வளவு காவலர்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்? யாரும் ஒழுங்கா வேலை செய்யவில்லை என்றுதானே அர்த்தம்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலையில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்படிருக்கிறாள்…அந்தக் குற்றவாளியை இன்னும் பிடிக்க முடியல, அப்புறம் என்ன பண்றீங்க.. அந்தக் குற்றவாளியை இன்னும் இரண்டு நாட்களுக்குள் பிடிக்கணும். திரும்பவும் இப்படி ஏதாவது நடந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன் என காவல் துறை அதிகாரிகளை காய்ச்சி எடுத்து விட்டாராம் முதல்வர் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு டோஸ் விட்டாராம் கமிஷனர். சுவாதி கொலையில் சம்பந்தப்பட்டவனை இரண்டு நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் கமிஷனர்.
0 comments:
Post a Comment