வீரப்பன் பற்றி பல கதைகள் உலவுகிறது. இதில் எது உண்மை என நமக்கு தெரிய நியாயம் இல்லை. இப்படத்தை இயக்கிய ராம் கோபால் வர்மா தனக்கு தெரிந்த கதையை ஒரு த்ரில்லராக கொடுக்க முயன்று இருக்கிறார். வீரப்பனாக நடித்திருக்கும் சந்தீப் பரத்வாஜ் உருவ ஒற்றுமை மட்டுமல்லாமல் நடிப்பிலும் மிரட்டியுள்ளார்.
வீரப்பன் ஆபரேஷனில் முதன்மையாக திகலும் ஒரு போலீஸ் ஆபிஸராக வரும் சச்சின் ஜோசி தன் பங்கை சரியாக செய்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறதே என தோன்றுகிறது.வீரப்பனின் மனைவியாக வரும் உஷா ஜாதவ் பார்க்க அப்பாவி லுக்கில் செட் ஆகிறார். ஆனால் அவுருக்குமா கூலிங் க்ளாஸ் எல்லாம்? என தோன்றுகிறது.
ஸ்ரேயா எனும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள லிஸா ரே, ஏமி ஜாக்ஸன், ஆன்ட்ரியா அக்கா போல உள்ளார். ஆனால் நடிப்பில் ஹிந்தி சீரியல் எபெக்ட். இவர்களை தவிர பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் எதுவும் மனதில் ஒட்டவே இல்லை.வீரப்பனை பற்றி குறைவான நேரத்தில் அறிமுகப்படுத்திய விதம் எல்லாம் ஓகே, ஆனால் அவரின் நோக்கம், குறிக்கோள், லட்சியம் எல்லாம் பற்றி தெளிவாக இருந்திருக்கலாம். படத்தில் வரும் காடுகள் படத்திற்கு நம்பக தன்மையை தர உதவுகிறது. படத்தின் முதல் பாதியை ஒப்பிடும் போது இரண்டாம் பாதி விறுவிறுவென நகர்கிறது.
CG காட்சிகள் குறைவாகவும் நன்றாகவும் பயன்படுத்தி உள்ளார்கள்.வீரப்பனை ஏதோ தெலுங்கு மசாலா பட வில்லனை போல் காட்டியுள்ளார் RGV. அதேபோல் இரு தரப்பினர் (வீரப்பன் போலீஸார்) செய்த விஷயங்களையும் முழுமையாக காட்டவில்லையோ என தோன்றுகிறது. ஒட்டு மொத்த படமும் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. படம் நேரடியான தமிழ் படமாக இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் மனதில் ஒட்டியிருக்குமோ என்னவோ. ஏதோ ஹிந்தி டப்பிங் சீரியல் பார்த்ததை போல் ஒரு உணர்வு தருகிறது.
படத்தில் காட்சிகள் படமாக்கப்பட்ட இடங்கள், குறிப்பாக படத்தில் வரும் காடுகள், முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி நன்றாக உள்ளது.பல்ப்ஸ்ஒரு நல்ல த்ரில்லராக வரக்கூடிய எல்லா அம்சங்கள் கொண்ட கதை, குழப்பமான காட்சியமைப்பினாலும் சுவாரஸ்யமற்ற திரைக்கதையாலும் மிக சுமாரான படமாக ஆகிவிட்டது.மொத்தத்தில் இந்த வில்லாதி வில்லன் வீரப்பன், டிவி டப்பிங் சீரியல் வில்லனாகிவிட்டார்.
0 comments:
Post a Comment