மதுரை - செங்கோட்டை இடையிலான அரசு பேருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் காணவில்லை. பேருந்து காணாமல் போனது தொடர்பாக பஸ் ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரின் புகாரின்படி போலீசார் விசாரணையை தொடங்கினர். ராஜபாளையம் பணிமனைக்குரிய பேருந்து கடத்தப்பட்டதா? என்று போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் அரசு பேருந்து சிவகாசி, திருமாஞ்சோலை அருகே சாலை ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அரசு பேருந்து கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து அரசு பேருந்தை கடத்தியவர் யார்? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment