Latest News
Tuesday, April 1, 2025

'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம் என்ன?

[Collection]

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்கள், போராட்டங்களில் ஈடுபட்டால் அமெரிக்க மாணவர்களின் படிப்பு நிறுத்தப்படும் அல்லது கைது செய்யப்படுவார்கள்.

வெளிநாட்டு மாணவர்கள் அவர்கள் நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள். எந்தக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இந்த செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அந்தக் கல்வி நிறுவனத்திற்கு அரசின் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

"படிப்பு நிறுத்தம்...வெளியேற்றம்...நிதி உதவி ரத்து" - ட்ரம்ப்

மீறினால் என்ன?

பாலஸ்தீனம் ஆதரவு போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தற்போது அமெரிக்க அரசு அவர்களாகவே சொந்த நாட்டிற்கு திரும்புமாறு மெயில் அனுப்பியுள்ளது.

இந்த எச்சரிக்கையை மீறினால் அமெரிக்க அரசு வெளியேற்றம், விசா ரத்து போன்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்படியான மெயில் அமெரிக்காவில் படிக்கும் பல இந்திய மாணவர்களுக்கும் சென்றுள்ளது.

நாடு திரும்புவதற்கான வசதிகள் அறிமுகம்!

இந்த செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் தங்களது நாட்டிற்கு அவர்களாகவே கிளம்ப உதவ CBP ஹோம் ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் தங்களது பாஸ்போர்ட்டுகளை கொடுத்து விசா பெற்றுக்கொள்ளலாம்.

இந்த மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களது விசாவை ரத்து செய்ய அமெரிக்க அரசு 'Catch and Revoke' என்ற ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: 'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம் என்ன? Rating: 5 Reviewed By: gg