Latest News
Friday, April 4, 2025

எழுத்துரு வடிவில் தமிழுக்கு வந்த சோதனை! - ஆப்பிள் சாதன பயனர்கள் வேதனை

சங்க காலங்களில் ஓலைச்சுவடிகளில் தமிழ் எழுதப்பட்டது, கல்வெட்டுகளில் தமிழ் செதுக்கப்பட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டிஜிட்டல் சாதனத்தின் விசைப்பலகையில் தமிழ் தட்டச்சு/உள்ளிட/எழுதப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மற்றும் மேக் சாதனங்களுக்கு இயங்குதள அப்டேட்களை அறிமுகம் செய்ய, அதன் ஊடாக புதிய சிக்கல் எழுந்துள்ளது.

சங்க காலங்களில் ஓலைச்சுவடிகளில் தமிழ் எழுதப்பட்டது, கல்வெட்டுகளில் தமிழ் செதுக்கப்பட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டிஜிட்டல் சாதனத்தின் விசைப்பலகையில் தமிழ் தட்டச்சு / உள்ளிட / எழுதப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மற்றும் மேக் சாதனங்களுக்கு இயங்குதள அப்டேட்களை அறிமுகம் செய்ய, அதன் ஊடாக புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதில் பயனர்களுக்கு குட் மற்றும் பேட் அனுபவமாக அமைந்துள்ளது. நல்ல செய்தி என்னவென்றால், தமிழ் உட்பட 10 இந்திய மொழிகளில் அந்த சாதனைகளின் பயனர்கள் கமெண்ட் கொடுக்கவும், மெனுக்களை பார்க்கவும் முடியும்.

அதே நேரத்தில் தமிழ் உட்பட 10 இந்திய மொழிகளின் எழுத்துருவும் (Font) மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, அதன் தரத்தை பயனர்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழ் எழுத்துகளுக்கே உரிய அழகியல் புதிய எழுத்துருவில் இல்லை என்பது அவர்களது சங்கடம். இது தொடர்பாக தங்களது எதிர்வினையை சமூக வலைதள பயனர்கள் மூலம் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: எழுத்துரு வடிவில் தமிழுக்கு வந்த சோதனை! - ஆப்பிள் சாதன பயனர்கள் வேதனை Rating: 5 Reviewed By: gg