2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இணையவழி கல்வி என்பது பரவலாகி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் திறன்பேசியிலும் மடிக் கணினியிலும் பாடம் படிப்பது வழக்கமாகி விட்டது.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இணையவழி கல்வி என்பது பரவலாகி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் திறன்பேசியிலும் மடிக் கணினியிலும் பாடம் படிப்பது வழக்கமாகி விட்டது. படிக்கவும், வாசிக்கவும், பொழுதுபோக்கவும் என எல்லா விஷயங்களுக்கும் திறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர். இப்படி இருக்க இன்ஸ்டகிராம், யூடியூப் போன்று சமூக வலைதளம் வழியே ஆக்கபூர்வமான விஷயங்களையும் கண்டிப்பாகச் செய்ய முடியும்.
என்ன செய்யலாம்? - ஒரே நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல சமூக வலைதளத்துக்கும் நன்மை, தீமை என இரண்டு பக்கங்கள் உண்டு. படிப்பு நேரம் முடிந்து உங்களைச் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சமூக வலைதளத்தைப் பயன்படுத்தலாம்.
0 comments:
Post a Comment