தற்போது அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 25 சதவிகித வரி ப்ளஸ் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரி வசூலித்து வருகிறது.
இதை குறைக்கவும், வர்த்தக ஒப்பந்தத்திற்காகவும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இந்திய அரசு.
இந்த நிலையில், நேற்று இந்தியாவின் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பதவியேற்பு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றது.

விரைவில் ஒப்பந்தம்
அந்த நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், "இந்தியா உடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். அது முன்பு இருந்த ஒப்பந்தத்தை விட, முற்றிலும் வேறானதாக இருக்கும்.
இப்போது இந்தியாவிற்கு என்னை பிடிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு மீண்டும் என்னை பிடிக்கும்.
நியாயமான ஒப்பந்தம் போடவிருக்கிறோம். அவர்கள் மிக நல்ல பேச்சுவார்த்தைகாரர்கள். அதனால், செர்ஜியோ அது குறித்து பார்க்க வேண்டும்.
இந்தியா உடனான ஒப்பந்தம் விரைவில் நடக்க உள்ளது. அது அனைவருக்கும் நல்லதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
வரி குறைப்பு..?
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இப்போது ரஷ்ய எண்ணெய் பிரச்னையால், இந்தியாவிடம் இருந்து அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அவர்கள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை வெகுவாக குறைத்துவிட்டார்கள். அதனால், இந்தியா மீதான வரியும் குறைக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment