Latest News
Saturday, January 10, 2026

டார்கெட் Greenland: "நான் முந்தவில்லை என்றால் சீனாவும், ரஷ்யாவும்.!" - ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

வெனிசுலாவைக் கைப்பற்றியதை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லேண்டிற்கு தற்போது குறி வைத்திருக்கிறார்.

இது புதிய குறி அல்ல... அவர் முதல்முறை அமெரிக்க அதிபராக பதவியேற்ற போதே வைத்த குறி தான். கடந்த ஆண்டும், அவர் இந்த விஷயத்தை அவ்வப்போது கூறி வந்தார்.

ஆனால், வெனிசுலாவைக் கைப்பற்றிய ஜோரில் இப்போது கிரீன்லேண்டைக் கைப்பற்றுவது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

கிரீன்லேண்ட் |Greenland
கிரீன்லேண்ட் |Greenland

ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்?

நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு, 'ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்?' என்பதை ஓபனாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

அவர் கூறியுள்ளதாவது...

"அவர்களுக்கு பிடிக்கிறதோ... இல்லையோ, கிரீன்லேண்ட் விஷயத்தில் நாம் ஒன்றை செய்ய உள்ளோம். நாம் அதை செய்யவில்லை என்றால், ரஷ்யா அல்லது சீனா கிரீன்லேண்டைக் கைப்பற்றும். நமக்கு ரஷ்யாவோ, சீனாவோ பக்கத்து நாடாக மாறப் போவதில்லை.

1951-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி, கிரீன்லேண்டில் அமெரிக்க ராணுவம் இருக்கிறது தான். ஆனாலும், அமெரிக்கா கிரீன்லேண்டை கைப்பற்றலாம்.

காரணம், இந்த மாதிரியான ஒப்பந்தம் மட்டும், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு போதாது" என்று பேசியுள்ளார்.

இந்தப் பேச்சில் இருந்தே, ட்ரம்ப் அடுத்ததாக கிரீன்லேண்டை தான் குறி வைத்திருக்கிறார் என்பது அப்பட்டமந்த் தெரிகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: டார்கெட் Greenland: "நான் முந்தவில்லை என்றால் சீனாவும், ரஷ்யாவும்.!" - ட்ரம்ப் என்ன சொல்கிறார்? Rating: 5 Reviewed By: gg