Latest News
Monday, January 12, 2026

Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்?

'போதைப்பொருள் கடத்தல்' - இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லித்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைப்பிடித்தார்.

அதன் பின், ட்ரம்பின் டார்கெட் முழுவதுமே வெனிசுலாவின் எண்ணெய் மீதுதான்.

''மதுரோவின் கைதிற்கு முன்னும், பின்னும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களிடம் பேசினேன்... வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் 30 - 50 மில்லியன் பேரல்கள் உயர்தர எண்ணெய்களை அமெரிக்காவிற்குத் தருவார்... உடனடியாக வெனிசுலாவில் தேர்தல் நடத்த முடியாது...'' - இப்படியான ட்ரம்பின் பேச்சுகள் அனைத்துமே மேலே சொன்னதைப் பறைசாற்றுகின்றன.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
ட்ரம்பின் இந்த அதிரடிகள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை மாற்றுமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

"சமீபத்தில் மிகப்பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அந்தச் சந்திப்பில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், அந்த எண்ணெயை அமெரிக்காவிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

இதை அவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட கட்டளையைப் போன்றே கூறியிருக்கிறார் அவர். ஆனால், இதில் எண்ணெய் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. தயக்கத்துடன் இருக்கின்றன.

அதிருப்திக்கு இரண்டு காரணங்கள்

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, வெனிசுலாவில் இப்போது நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை.

இன்னொன்று, வெனிசுலாவில் இருப்பது புளிப்புக் கச்சா எண்ணெய் (Sour Crude Oil). அதை எடுத்து, பிராசஸ் செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதிக பணமும்... முதலீடுகளும் தேவை.

எண்ணெய் நிறுவனங்களிடம் ட்ரம்ப் பேசும்போது, உலக அளவில் கச்சா எண்ணெயின் விலையை 50 டாலர்கள் எனக் குறைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால், ட்ரம்பின் அந்தச் சந்திப்பு தற்போதைய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பெரிதாக மாற்றவில்லை.

இந்தச் சந்திப்பின் விளைவாக ஏதாவது நடந்தால், பின், கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றம் இருக்கலாம்" என்றார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்? Rating: 5 Reviewed By: gg