சூது கவ்வும், அறிமுக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்துள்ள படம். சின்ன சின்னதாக ஆள் கடத்தி சம்பாதித்து வரும் விஜய் சேதுபதியிடம், மூன்று நண்பர்கள் இணைகிறார்கள். அதுவரை சின்ன சின்ன ஆள் கடத்தல் செய்து வந்த அவர்கள் 2 கோடிக்காக, அமைச்சரின் மகனை கடத்த திட்டமிடுகிறார்கள். திட்டமிட்டப்படி அமைச்சர் மகனை கடத்த சென்ற அன்று அமைச்சர் மகனை வேறு ஒரு கூட்டம் கடத்துகிறது. அந்த கும்பலிடம் இருந்து அமைச்சர் மகனை கடத்தின பிறகு தான், அமைச்சர் மகனே தன்னை ஆள் வைத்து கடத்தியது அவர்களுக்கு தெரிகிறது. இந்தநிலையில் அமைச்சர் மகன் என்னை கடத்திய பணத்தை வாங்க நான் உதவுகிறேன் அதற்கு எனக்கு நீங்கள் ஒரு கோடி தர வேண்டும் என்று கேக்க, விஜய் சேதுபதி குழுவினரும் சம்மதிக்கின்றனர்.
காசை அமைச்சரிடம் இருந்து வாங்கிய பிறகு அவர்களுக்கேட்பட்ட சண்டையில் அமைச்சரின் மகன் 2 கோடியை தனியாக தூக்கி செல்கின்றான். இந்த நிலையில் கடத்திய விஜய் சேதுபதி குழுவை கண்டுபிடிக்க அமைச்சர் மோசமான போலீசான பில்லா ஜெகனை நாடுகிறார். போலீசிடம் விஜய் சேதுபதி குழு சிக்கியதா? அந்த 2 கோடி என்ன ஆனது என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி அமர்க்களம் பண்ணியுள்ள படம். ஆட்களை கடத்துவதற்கு 5 நெறிமுறை சொல்லும் இடத்தில இருந்து , சஞ்சிதா ஷெட்டி என ஒரு கற்பனை கதாப் பாத்திரம் தன்னோடு இருப்பதாக நினைத்து அவர் பேசுவதென்று மனிதர் அமர்களப் படுத்தியிருக்கிறார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி கவர்ச்சியாக வந்து போகிறார். வாய் பேசாத கோபக்கார போலிசாக பில்லா ஜெகன் பார்வையாலேயே மிரட்டி இருக்கிறார்.
படத்தின் இன்னொரு நாயகன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் தான். ஒவ்வொரு காட்சியிலும் இசையில் மிரட்டியிருக்கிறார். விறுவிறுப்பான கதையை காமெடி கலந்து தந்ததில் அறிமுக இயக்குனர் நலன் குமாரசாமி வெற்றி அடைந்துள்ளார். சூது கவ்வும் அனைவரையும் கவ்வும்....
0 comments:
Post a Comment