Latest News
Monday, June 3, 2013

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழுவதில் தவறில்லை! ரீமா கல்லிங்கல்

ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை, என்று நடிகை ரீமா கல்லிங்கல் கூறியுள்ளார். பரத் நடித்த யுவன் யுவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரீமா கல்லிங்கல். கேரளாவை சேர்ந்தவர். கேரளா கபே, ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், சிட்டி ஆப் காட், நீலத்தாமரா, 22 பீமேல் கோட்டயம், நித்ரா உள்பட பல மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ரீமா கல்லிங்கல், 22 பீமேல் கோட்டயம் படத்தில் நடித்தபோது அவருக்கும், அந்த படத்தின் டைரக்டர் ஆஷிக் அபுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளாமல் டைரக்டர் ஆஷிக் அபுவுடன் சேர்ந்து வாழ்வது பற்றி ரீமா கல்லிங்கல் அளித்துள்ள பேட்டியில், ஒரு ஆணும், பெண்ணும் மனதளவில் இணைந்து, ஒருவரையொருவர் புரிந்து கொண்டபின், சேர்ந்து வாழ்வதில் தப்பு இல்லை. திருமணம் செய்து கொண்டால் தான் சேர்ந்து வாழ முடியும் என்பதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. மனதளவில் இணைந்தாலே போதும். புரிதல்தான் மிக முக்கியமானது. கருத்து ஒற்றுமையும், புரிதலும் இருந்தால் ஒரு ஆணும், பெண்ணும் தாராளமாக சேர்ந்து வாழலாம். எனக்கு இந்த வாழ்க்கை பிடித்து இருக்கிறது. இதை தொடர்வதுதான் சிறந்தது என்று கருதுகிறேன், என்று கூறியுள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழுவதில் தவறில்லை! ரீமா கல்லிங்கல் Rating: 5 Reviewed By: gg