Latest News
Wednesday, June 5, 2013

கமல் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- பிஆர்ஓ

சென்னை: கமல் ஹாசன் பெயரில் இருக்கும் ட்விட்டர் கணக்கு போலியானது என்று அவரது பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசன் ஃபேஸ்புக்கில் உள்ளார். அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை எம்ஏஐஏஎம் குழு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் @maiamkhassan என்ற பெயரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கைப் பார்த்த ரசிகர்கள் கமல் தான் ட்விட்டருக்கு வந்துவிட்டார் என்று நினைத்து அவரை வரவேற்கத் துவங்கிவிட்டனர்.
ஆனால் உண்மையில் யாரோ விஷமி தான் கமல் பெயரில் போலி கணக்கை துவங்கியுள்ளார். இது கமலின் பி.ஆர்.ஓ. கூறித் தான் தெரிய வந்துள்ளது. மேலும் கமல் பெயரில் போலி கணக்கு துவங்கி அவரின் ரசிகர்களை ஏமாற்றியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார்.
பிரபலங்களின் பெயரில் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பல போலி கணக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கமல் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- பிஆர்ஓ Rating: 5 Reviewed By: gg