Latest News
Sunday, June 2, 2013

புதுமுக ஹீரோக்களுடன் நடிக்கப்போவதில்லை! ப்ரியாஆனந்த் உறுதி!


வாமனன் ப்ரியாஆனந்த், எதிர்நீச்சல் படத்துக்குப்பிறகுதான் சினிமாவில் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். அதனால் இதுவரை மார்க்கெட்டில் மந்தமாக இருந்த அவர் இப்போது ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி நடித்து வரும் ப்ரியாஆனந்தைத்தேடி சில புதுமுக நடிகர்களின் படவாய்ப்புகளும் முற்றுகையிடுகிறதாம். அதோடு, கால்சீட் கொடுத்தால் அதிகப்படியான சம்பளம் தருவதாகவும் சொல்கிறார்களாம்.
ஆனால், முதலில் அதிக சம்பளம் என்றதும் சபலப்பட்ட ப்ரியாஆனந்த், அந்த படங்களில் நடிக்கவும் தயாராகி வந்தார். திடீரென்று, தனது மார்க்கெட் எகிறியிருக்கும் இந்த நேரத்தில் புதுமுகங்களுடன் நடித்தால், ஏறின வேகத்திலேயே மார்க்கெட் இறங்கிவிடும் என்பதை யூகித்து விட்ட அவர், அப்படங்களில் தன்னால் நடிக்க முடியாது என்று உறுதியாக மறுத்து விட்டாராம். மேலும், இப்போதைக்கு அயிட்டம் பாடல்களுக்கும் ஆடமாட்டேன் என்ற கொள்கையையும் கடைபிடிப்பதாக சொல்கிறார் ப்ரியாஆனந்த். 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: புதுமுக ஹீரோக்களுடன் நடிக்கப்போவதில்லை! ப்ரியாஆனந்த் உறுதி! Rating: 5 Reviewed By: gg