Latest News
Sunday, June 2, 2013

யுவன் கேட்டுக் கொண்டதால் அஜீத்துக்காக குரல் கொடுக்கும் ஏ.ஆர். ரஹ்மான்?


சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அஜீத் நடித்துள்ள பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடல் பாடுகிறாராம்.
மரியான் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்காக யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடிக் கொடுத்தார். இந்நிலையில் யுவன் தான் இசையமைக்கும் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடல் பாடுமாறு ஏ.ஆர்.ரஹ்மானை கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு ரஹ்மானும் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாகவிருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோரும் உள்ளனர். அண்மையில் தான் படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெற்று முடிந்தது.
முன்னதாக துபாயில் அஜீத்தின் பைக், படகு சாகச காட்சிகள் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: யுவன் கேட்டுக் கொண்டதால் அஜீத்துக்காக குரல் கொடுக்கும் ஏ.ஆர். ரஹ்மான்? Rating: 5 Reviewed By: gg